அஜித், தனது 60ஆவது படமான வலிமையைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் இணைந்துள்ளார். அஜித்தின் 61ஆவது படமான இதை அஜித்தின் முந்தைய படங்களான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமையைத் தயாரித்த போனிகபூரே தயாரிக்கவிருக்கிறார். கதாநாயகி உள்ளிட்ட பிற நடிகர்களின் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 9ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர் இணைந்துள்ளார். நிபின்பாலி நடித்த ரிச்சி மற்றும் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களுக்கு இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். அஜித்தின் இப்படத்தில் வலிமை அளவுக்கு அதிகமான ஆக்சன் காட்சிகள் இருக்காதாம். அதே நேரம் கதைக்குத் தேவையான அளவுக்கு வித்யாசமான ஆக்சன் காட்சிகள் இதில் இருக்குமாம்.
இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹெச். வினோத் இயக்கிய முதல் படமான சதுரங்க வேட்டையில், நாட்டில் நடக்கும் பல்வேறு விதமான மோசடிகளை வித்யாசமான பாணியில் சுட்டிக் காட்டியிருந்தார். ஹெயிஸ்ட் த்ரில்லர் வகைக் கதையில் உருவான அப்படம் பல நூதன மோசடிகளை அம்பலப்படுத்தியதுடன் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும் அமைந்திருந்தது. இந்த நிலையில்தான் அஜித்தின் இப்படமும் பேங்க் ஹெயிஸ்ட் த்ரில்லராக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ‘வலிமை’ வசூல் எவ்வளவு? - சீக்ரெட்டை உடைத்த போனிகபூர்!
வினோத் நடிகர் கார்த்தியை வைத்து முன்னதாக இயக்கியிருந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வடநாட்டுக் கொள்ளைக் கும்பல் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து அப்படம் உருவாகியிருந்தது. எனவே அஜித்தின் இப்படமும் இந்தியாவில் நடந்த பிரபலமான வங்கிக்கொள்ளைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் இயக்குவதில் இயக்குநர் வினோத் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே நல்ல கவனத்தைப் பெற்றிருப்பதால் இந்தப் படத்துக்கும் தற்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க| அஜித்துக்கு சம்பளம் இத்தனை கோடியா?! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR