கோடி கோடியாய் வசூலை குவிக்கும் ஜெயிலர்..! முதல் நாளே இவ்வளவு கலெக்‌ஷனா..?

Jailer Box Office Collection: ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 11, 2023, 06:38 AM IST
  • ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான படம் ஜெயிலர்.
  • இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.
  • படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
கோடி கோடியாய் வசூலை குவிக்கும் ஜெயிலர்..! முதல் நாளே இவ்வளவு கலெக்‌ஷனா..?  title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம், ஜெயிலர். இந்த படத்தில் தமன்னா, ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று (ஆக., 10) வெளியான நிலையில், ரசிகர்களின் அமாேக வரவேற்பினை பெற்றுள்ளது. 

கம்-பேக் கொடுத்த ரஜினி-நெல்சன்!

ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், ரஜினிகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் நடிக்கும் படங்கள் நன்றாக ஓடினாலும் விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. இவரது கம்-பேக்கிற்காக தமிழ் திரையுலகமே காத்துக்கொண்டிருந்தது. இவரது கடைசி படமான அண்ணாத்த, குடும்பங்களை ஈர்த்ததே தவிர, சினிமா ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிதாக பாராட்டப்படவில்லை. இதையடுத்து இவரை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம்தான் ஜெயிலர். இப்படம் குறித்த அறிவிப்பு வந்த பிறகுதான், இவர் விஜய்யை வைத்து இவர் இயக்கியிருந்த ‘பீஸ்ட்’ படம் வெளியானது. படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று சொதப்பிதால் ரஜினிகாந்திற்கு இவரால் என்ன நிலைமையோ என ரசிகர்கள் பயந்தனர். நேற்று வெளியாகியிருந்த ஜெயிலர் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் அந்த பயம் ரசிகர்களின் கண்களில் இருந்து அகன்றுள்ளது. 

மேலும் படிக்க | ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

முதல் நாள் வசூல்:

ஜெயிலர் படம், உலக அளவில்  50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் நிலவரம் 2வது நாளான இன்று 75 கோடியாகவும் 3வது நாளான சனிக்கிழமை 110 கோடியாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை இந்த வசூல் 150 கோடியாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. படத்தின் வசூல் 200 கோடியை எட்டுவதற்கு குறைந்தது 6-7 நாட்கள் வரை ஆகலாம் என நம்பப்படுகிறது. படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஜெயிலர் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

அனிருத்திற்கு பாராட்டு மழை:

தமிழ் சினிமாவின் ‘ராக்ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், அனிருத். ‘3’ படம் மூலம் தன் இசைப்பயணத்தை துவக்கிய இவர், தற்போது இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் இசையமைப்பாளர்களுள் ஒருவராக உள்ளார். ஜெயிலர் படத்தில் இடம் பெற்றிருக்கும் இவரது பின்னணி இசைக்கும் ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக ‘ஹூக்கும்’ பாடலுக்கும் படம் முழுக்க அவ்வப்போது வரும் மாஸான மரண இசைக்கும் ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். நேற்று வெற்றி திரையரங்கில் ஜெயிலர் படத்தை பார்த்த அனிருத், அங்கு ரசிகர்களுக்காக ஹூக்கும் பாடலை பாடி காண்பித்தார். 

வன்மத்தை கக்கிய விஜய் ரசிகர்கள்…

விஜய்-அஜித் ரசிகர்கள் அடித்துக்கொண்ட காலம் மலையேறி, தற்போது ரஜினி-விஜய் ரகிகர்கள் பயங்கர சண்டை போட்டு வருகின்றனர். நடிகர் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினியின் ரசிகர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் Meme War நடந்து வருகிறது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சம்பவங்கள் இதற்கு காரணமாக அமைந்துவிட்டன. நேற்று ஜெயிலர் படம் வெளியானவுடன், சில டாக்ஸிக் விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே ஜெயிலர் படம் குறித்து நெகடிவ் வகையிலான விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர். மேலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் ரஜினியை ஏதேனும் ஒரு வகையில் கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். 

காமியோ கதாப்பாத்திரங்கள்:

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை தவிர்த்து நடித்திருந்த முன்னணி நடிகர்கள் அனைவருமே காமியோ கதாப்பாத்திரத்தில்தான் வந்தனர். தமன்னா படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலைக்காட்டி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோரின் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது முழு நடிப்பையும் ஜெயிலர் படத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் இருந்து விமர்சனம் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | சமந்தா பெயரில் இட்லி கடை வைக்க நினைத்த பிரபல நடிகர்..! ஏன் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News