சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் 100வது நாளை எட்டியுள்ளது. இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் கூட்டணியில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு இருந்ததால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மகிழ்ச்சியடைந்தார். படம் வெளியாவதற்கு சில பிரச்சனைகள் இருந்த நிலையில், அதனைக் கடந்து படத்தை வெளியிட தயாரிப்பாளர் சுரேஷ் பெரும் முயற்சிகளை எடுத்தார். அவரின் முயற்சியால் வெளியான மாநாடு திரைப்படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் படிக்க | ரகுமான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!
இதனையடுத்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்க உள்ள சுரேஷ் காமாட்சி, 2019 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ஜீவி படத்தின் பார்ட் 2-வை தயாரிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில், படத்திற்கான சூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. மாநாடு 100வது நாளில் ஜீவி இரண்டாம் பாகத்தின் சூட்டிங் தொடங்கியிருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இந்த பாகத்தையும் இயக்க உள்ளார்.
முதல் பாகத்தில் நடிகர் வெற்றி, கருணாகரன், மோனிகா, மைம் கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஜீவி பார்ட் ஒன்றில் லீட் ரோலில் நடித்த வெற்றி, இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். படம் குறித்து பேசியுள்ள எடிட்டர் பிரவின், ஜீவி 2 படத்தின் கதையும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு முக்கோண விதியில் உருவாகும் இப்படம், இம்முறை அதிக அழுத்தமுடன் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். படத்தின் முதல் நாள் சூட்டிங் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஜெயம் ரவி - நயன்தாரா ஜோடி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR