உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2021, 07:20 PM IST
உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! title=

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக மாரி செல்வராஜ் உயர்ந்துள்ளார்.  சமீபத்தில் இவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.  அதனைத்தொடர்ந்து இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ | தனுஷை வைத்து இயக்கும் ராக்கி பட இயக்குனர் அருண்!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழில் வெளியான 'அண்ணாத்தே' படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.  அதனை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தில் ஒரு அரசியல் கதாபாத்திரத்தை ஏற்று கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

udhayanithi

மேலும் பெயரிடப்படாத இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ், நீலம் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரமை வைத்து விளையாட்டு சம்மந்தப்பட்ட படம் ஒன்றை இயக்கவுள்ளார்.  அதனையடுத்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கப்போவதாக தெரிகிறது.  விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் உள்ளிட்ட சில தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

keerthy

தற்போது கீர்த்தி சுரேஷ் 'சாணி காயிதம்' மற்றும் 'குட் லக் சகி' ஆகிய இரு படங்களிலும் நடித்து முடித்துள்ளார், இவை ரிலீசுக்காக காத்திருக்கின்றன.  மேலும் மகேஷ் பாபுவுடன் 'சர்க்காரு வாரி பாட்டா' என்ற படத்திலும், சிரஞ்சீவியுடன் 'போலா சங்கர்' என்ற படத்திலும் நானியுடன் 'தசரா' படத்திலும் நடித்து வருகிறார்.

ALSO READ | இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி சேரும் ரஜினிகாந்த்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News