2017-ம் ஆண்டு பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் கைதான நடிகர் திலீப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பான வீடியோ பதிவுகள் நடிகர் திலீப்பிடம் உள்ளதாகவும், இவ்வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகளைக் கொல்ல நடிகர் திலீப் திட்டம் தீட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடிகர் திலீப் மீது புதிய வழக்கு தொடரப்பட்டது. நடிகர் திலீப், அவரது தம்பி, தங்கையின் கணவர் உள்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக திலீப் உள்ளிட்டோரின் செல்போன்களை ஆய்வு செய்ய வேண்டுமென்ற போலீசாரின் கோரிக்கைக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து மூவரும் பயன்படுத்திய 6 செல்போன்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. நடிகர் திலீப் தனது செல்போன்களில் இருந்த முக்கிய விவரங்களை அழித்து விட்டதாக, தடயவியல் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள ஐகோர்ட் மறுப்பு!
இன்று இவ்வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நடிகர் திலீப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராமன் பிள்ளை, பிலிப் வர்கீஸ், தாமஸ் வர்கீஸ் ஆகியோர் இவ்வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் விரிவான விசாரணை தேவை என்பதால் கோடை விடுமுறைக்குப் பின் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க வேண்டுமெவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை நிராகரித்த நீதிபதி ஹரிபால், குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்ததோடு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும் படிக்க | கேரள நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் அதிரடி!! நடிகர் திலீப் நீக்கம்..
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR