Sachein Movie Re-Release Date: கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆக இருக்கும் விஜய் கூடிய விரைவில் தனது திரையுலக பயணத்தை முடித்துக்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், அவரது சூப்பர் ஹிட் படமான சச்சின் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சச்சின் திரைப்படம்:
விஜய் நடிப்பில் வெளியான காமெடி-காதல் படங்களில் சிறந்த படமாக இருப்பது, சச்சின். தெலுங்கில் ‘நீதோ’ என்ற பெயரில் வெளியான இந்த படத்தை தமிழில் சிறு மாறுதல்களை செய்து, விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்து 2005ல் இப்படத்தை ரிலீஸ் செய்தனர். தெலுங்கில இப்படம் ஹிட் ஆனதா என தெரியாது. ஆனால் தமிழில் இளசுகள் மத்தியில் பெரிய ஹிட் அடித்தது.
சிம்பிளான கல்லூரி காதல் கதையாக இருந்தாலும், விஜய்யின் துருதுரு நடிப்பும், ஜெனிலியாவின் க்யூட் ரியாக்ஷ்னகளும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்தது. கூடவே வடிவேலுவின் ‘அய்யாச்சாமி’ காமெடி, தேவி ஸ்ரீ பிரசாத்தின் துள்ளான இசையில் பாடல்களும் இணைந்து கொண்டது, வெற்றிக்கு வழிவகுத்தது.
இப்போது இளம் வயதில் இருக்கும் பலர் சச்சின் படம் வெளியான போது அதை தாங்கள் குழந்தையாக இருக்கும் போது பார்த்திருப்பர். இதனால், இப்படம் அவர்களுக்கு வெறும் படம் மட்டுமல்ல, ஒரு அழகிய தியேட்டர் நினைவும் கூட. இதனாலேயே, எத்தனை முறை இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும், எத்தனை விளம்பர இடைவேளைகள் வந்தாலும் டிவி-யையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பர்.
ரீ-ரிலீஸ்!
கடந்த சில 2 ஆண்டுகளில், ஏற்கனவே ஹிட் ஆன அல்லது தாமதமாக ரசிகர்கள் புரிந்து கொண்ட படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த ஆண்டில் விஜய், ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் நடித்த படங்கள் சில ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றன. அந்த வகையில், விஜய்யின் சச்சின் படமும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.
#Sachien is planned for a 4K re release to celebrate its 20th anniversary on 2025 April 14th
- PRODUCER Kalaipuli S. Thanu
— Niranjan ツ (@niranjanposts) December 27, 2024
2 மணி நேரம் 23 நிமிடங்கள் நிரம்பிய இந்த திரைப்படம் சிறிது கலர் கரெக்ஷன் செய்யப்பட்டு வரும் 2025 ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதனை, அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தெரிவித்திருக்கிறார். அது மட்டுமன்றி இதற்காக நிறைய ப்ரமோஷன்களையும் செய்ய இவர்கள் திட்டமிட்டு வருகின்றனராம். இதை, தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | ‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?
அப்போதைய வசூல் எவ்வளவு?
சச்சின் படம், 2005ல் தியேட்டர்களில் வெளியான போது 200 நாட்களை கடந்து ஓடியதாம். அது மட்டுமன்றி பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூ.25 கோடியை இப்படம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. ரீ-ரிலீஸில், இந்த வசூலை மீண்டும் தயாரிப்பாளர்கள் அள்ளி விடலாம் என கூறப்படுகிறது.
இத்தனை படங்கள் மறு வெளியீடா?
விஜய், இப்போது பல புது படங்களில் நடித்து வந்தாலும் அவரது பழைய படங்களை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டின் ஏப்ரல் 20ஆம் தேதி கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் ஹிட் அடித்தது. உலகளவில் சுமார் ரூ.50 கோடி வரை இப்படம் கலெக்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி துப்பாக்கி, கத்தி, போக்கிரி, மெர்சல் உள்ளிட்ட படங்கள், ஒரு சில தியேட்டர்களில் மீண்டும் திரையிடப்பட்டன. தற்போது இந்த லிஸ்டில் சச்சின் படமும் சேர இருப்பது, விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
மேலும் படிக்க | கில்லி vs தளபதி: ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய படம் எது? வசூல் யாருக்கு அதிகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ