OTT Releases This Week : கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துவிட்டது. இதையொட்டி தியேட்டர்களில் வெளியாகும் புது படங்களும் ரிலீஸ் இருக்கு சில நாட்களுக்கு பின்பு ஆன்லைனில் பல தளங்களில் வெளியாகி விடுகின்றன. அந்த வகையில், இந்த வாரமும் பல படங்கள் வெளிவர இருக்கின்றன. அவற்றின் லிஸ்டையும், எதை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
சொர்க்கவாசல்-நெட்ஃப்ளிக்ஸ்:
ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான படம் சொர்க்கவாசல். சென்னை சிறையில் 1999 ஆம் ஆண்டு நடந்த உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் செல்வராகவன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பல படங்களில் காமெடி ரூபம் எடுத்த ஆர் ஜே பாலாஜி எந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனை டிசம்பர் 27 ஆம் தேதியான நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.
அந்தகன்: ஆஹா/சன் நெக்ஸ்ட்
பிரசாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம், அந்தகன். இந்திந்தியில், அந்தாதூன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட படத்தின தமிழ் ரீ-மேக் ஆக இது வெளியானது. இந்த படத்தில் பிராசந்திற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார். சிம்ரன், சமுத்திரகனி உள்ளிட்டோர் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ரிலீஸே, பல நாட்கள் தள்ளிப்போன நிலையில், இதன் ஓடிடி ரிலீஸும் தள்ளிப்போடப்பட்டு வந்தது. ஒரு வழியாக இப்போது சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஆகிய தளங்களில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை நாளை முதல் காணலாம்.
ஜாலியோ ஜிம்கானா: ஆஹா
பிரபுதேவா நடிப்பில் வெளியான படம், ஜாலியோ ஜிம்கானா. இந்த படத்தில், யோகி பாபு, மடோனா சபாஸ்டியன், யாஷிகா ஆனந்த், அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சக்தி சிதம்பரம் இயக்கிய இந்த படம், கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியானது. இதனை, டிச., 27ஆம் தேதியான நாளை முதல் பார்க்கலாம்.
வட்டார வழக்கு: டெண்ட்கொட்டா
டப்பிங் கலைஞர் ரவீனா ரவி நடித்திருந்த படம், வட்டார வழக்கு. இதனை கண்ணுசாமி ராமச்சந்திரன் இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸான இந்த படத்தை இப்போது டெண்ட்கொட்டா தளத்தில் நாளை வெளியாக இருக்கிறது.
ரூபன்: டெண்ட்கொட்டா:
விஜய் பிரசாத், காயத்ரி ரமா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ரூபன். திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை டெண்ட்கொட்டா தளத்தில் நாளை முதல் காணலாம்.
ஸ்குவிட் கேம்: நெட்ஃப்ளிக்ஸ்
உலகளவில் பலரால் எதிர்பார்க்கப்பட்ட தொடராக இருக்கிறது, ஸ்குவிட் கேம், சீசன் 2. கொரிய தொடரான இது, பல்வேறு விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் சொந்தமான தொடராகும். இதன் இரண்டாவது சீசன் தற்போது வெளியாக உள்ளது. இதனை, நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். இந்திய நேரப்படி, மதியம் 12 மணி முதல் இத்தொடர் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
மேலும் படிக்க | ஓடிடியில் ஒரே நாளில் வெளியாகும் 22 திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
பூல் புலாயா 3: நெட்ஃப்ளிக்ஸ்
கார்த்திக் ஆர்யன், த்ரிப்தி டிம்ரி, வித்யா பாலன் உள்ளிட்ட நடித்திருந்த படம், பூல் புலாயா. இந்த படத்தின் மூன்றாம் பாகம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஹாரர், காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த இந்தி படத்தை டிச., 27ஆம் தேதியான நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.
பிற படங்கள்/தொடர்கள்:
மேர்கூறியவை மட்டுமன்றி இன்னும் சில படங்களும் தொடர்களும் டிசம்பர் 27ஆம் தேதியான நாளை ஓடிடியில் வெளியாக இருக்கின்றன.
- பைரதி ரணங்கள்-கன்னடம்-அமேசான் ப்ரைம்
- க்ளாடியேட்டர் 2-ஆங்கிலம்-ப்ரைம் ரெண்ட்
- லைலா மஜ்னு-இந்தி-நெட்ஃப்ளிக்ஸ்
- ஆரிஜின்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
- பர்ட்-ஆங்கிலம்-முபி
- தி ஆர்க்டிக் கான்வாய்-ஆங்கிலம்-ஹுலு
- டாக்டர் ஹூ-ஆங்கிலம்-ஹாட்ஸ்டார்
- ஜம்ப் ச்டார்ட் மை ஹார்ட்-ஸ்பேனிஷ்-ப்ரைம்
- பஞ்சாயத் ஜெட்டி-மலையாளம்-மனோரமா மேக்ஸ்
- பார்டி டில் ஐ டை-இந்தி-ப்ரைம்
- இன்ஃபெஸ்டட்-ஃப்ரெஞ்-ப்ரைம்
- டாக்டர்ஸ்-இந்தி-ஜியோ சினிமா
- மதர்ஸ் இன்ஸ்டிங்க்ட்-ஆங்கிலம்-லயன்ஸ்கேட்
- யுவர் ஃபால்ட்-ஸ்பேனிஷ்-ப்ரைம்
- ரஹசியம் இதம் ஜகத்-தெலுங்கு-ஈடிவி வின்
- தி ரவுண்ட் அபொ பனிஷ்மெண்ட்-கொரியன்-ப்ரைம்
- RRR பிஹைண்ட் அண்ட் பியாண்ட்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்ட்ரி
- கோஜ் பர்ச்சாய்யோன் கே உஸ் பார்-இந்தி-ஜீ 5
- ஐ ஆம் தி சீக்ரெட் இன் யுவர் ஹார்ட்-மாண்டரியன்-நெட்ஃப்ளிக்ஸ்
மேலும் படிக்க | ஓடிடியில் பார்க்க வேண்டிய 7 ராஜா கால தொடர்கள்! எந்த தளத்தில் பார்ப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ