Pass மார்க் வாங்கியதா ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்..? ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Mark Antony Twitter Review: விஷால் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளதா..? இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Sep 15, 2023, 11:20 AM IST
  • விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம், மார்க் ஆண்டனி.
  • இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
  • மார்க் ஆண்டனி படம் எப்படியுள்ளது..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்.
Pass மார்க் வாங்கியதா ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்..? ட்விட்டர் விமர்சனம் இதோ..!  title=

கோலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோக்களுள் ஒருவர் விஷால். இவர், அவ்வப்போது காமெடி படங்களிலும் நடிப்பதுண்டு. அப்படி அவர் நடித்திருக்கும் படம்தான் மார்க் ஆண்டனி. இதில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் ரசிகர்களை கவர்ந்ததை ஒட்டி, படத்தின் மீது அனைவருக்கும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. 

மார்க் ஆண்டனி படத்தில் அஜித் குமார்..

மார்க் ஆண்டனி படத்தின் முதல்காட்சி தொடங்கப்பட்டு விட்டதை ஒட்டி, படத்தின் முதல் பாதி முடிந்த பிறகு ரசிகர்கள் சிலர் படம் குறித்து ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

ஒரு ரசிகர், இப்படத்தில் அஜித்குமாரின் படங்கள் ரெஃபரன்ஸாக காண்பிக்கப்பட்டுள்ளதாக. 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அஜித் படங்களான அமராவதி, வாலி, விடாமுயற்சி ஆகிய படங்கள் ரெஃபரன்ஸாக வைக்கப்பட்டுள்ளதாக குறிபிட்டுள்ளார். 

மாஸ் காட்டிய எஸ்.ஜே.சூர்யா:

மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே,சூர்யா மொத்த ஷோவையும் தூக்கி நிறுத்துவதாக ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். 

படத்தில் நடனம், சில்க் ஸ்மிதா வரும் காட்சி, இடைவேளை காட்சி, ஜாக்கி பாண்டியனின் நடக்கும் ஸ்டைல் ஆகியவை மாஸாக இருந்ததாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது எப்படி?

பின்னணி இசை வேற லெவல்..!

மார்க் ஆண்டனி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார். அதில், “இது ஜி.வி.பிரகாஷின் சம்பவம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், ரெட்ரோ வகை பின்னணி இசையை சிறப்பாக அமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

பாஸ் ஆண்டனி!

மார்க் ஆண்டனி படம் பாஸ் மார்க் வாங்கியுள்ளதாக ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். 

முதல் பாதி கொஞ்சம் சுமார்தான் என்றும், இரண்டாவது பாதி நகைச்சுவையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் அந்த ரசிகர். 

கேங்க்ஸ்டர் ட்ராமா!

ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே படத்தை ‘ஹிட்’ என்றி கணித்து விட்டதாக ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாடல் இல்லை, காதல் பி.ஜி.எம்தான். சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் கேங்க்ஸ்டர் ட்ராமா” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | இவ்வளவு சீக்கிரம் படத்தை இயக்குவான்னு நினைக்கலை - கார்த்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News