தமிழ் திரையுலகில் ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவருடன் சமீப சில நாட்களாக நடிகர் விஜய்யை வைத்து ஒப்பிட்டு ரசிகர்கள் சிலர் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த லிஸ்டில் புதிதாக ஒரு பிரபலமும் இணைந்துள்ளார்.
ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்..!
கோலிவுட்டை பொருத்தவரை, யாரும் தொட முடியாத உயரத்திற்க்கு சென்ற நடிகராக மாறியுள்ளவர் ரஜினிகாந்த். ஸ்டார் நடிகர்களான விஜய்-அஜித் ஆகிய இருவரும்தான் இதுவரை போட்டி நடிகர்களாக கருதப்பட்டனர். இவர்களின் ரசிகர்கள்தான் பட ரிலீஸ் சமயங்களிலும், காரணமே இல்லாமலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அந்த நிலை கடந்த சில வருடங்களில் பெரிதாக மாறியுள்ளது. நடிகர் விஜய், ரஜினியின் இடத்தை பிடிக்க முயற்சிப்பதாக சில கருத்துகள் எழ, இதனால் பொங்கியெழுந்த ரஜினிகாந்தின் ரசிகர்கள் விஜய் மற்றும் அவரது ரசிகர்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் மீம்ஸ் போட்டு பொளந்து எடுத்து வருகின்றனர். ஆனால், தனிப்பட்ட முறையில் விஜய்-ரஜினி இருவருக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலைியல், ரஜினிகாந்தை விட விஜய் பெரிய ஆள் என பிரபல நடிகர் ஒருவர் ஓபனாக ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
மேலும் படிக்க | ரஜினியுடன் நடிக்க மறுத்த ‘அந்த’ பிரபல நடிகர்..! இதுதான் காரணம்..!
ராமராஜன்:
70 மற்றும் 80களில் தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக இருந்தவர், ராமராஜன். அரசியலில் சில நாட்கள் ஈடுபட்டிருந்த இவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து சில வருடங்கள் விலகி இருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு, ‘சாமானியன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது குறித்த நேர்காணலில் அவர் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது ரஜினி மற்றும் விஜய் குறித்து பேசினார்.
“ரஜினியை விட விஜய்..”
ராமராஜன் தான் கலந்து கொண்ட அந்த நேர்காணலில் சமீபத்தில் வெளியாகியிருந்த ‘ஜெயிலர்’ படம் குறித்து பேசினார். அப்போது தான் அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றும் ரஜினிகாந்த் இந்த வயதிலும் இன்னும் இப்படி நடித்துக்கொண்டிருப்பது மிகவும் நல்ல விஷயம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய், ரஜினியை தாண்டி வசூல் ரீதியாக உயரத்திற்கு சென்று விட்டதாகவும் அவர் நடித்துள்ள லியோ படம் பெரிய அளவில் வியாபாரம் செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவர் கூறிய இந்த கருத்து, ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோவாக…
நடிகர் ராமராஜன், 80ஸ் மற்றும் 90ஸ் குழந்தைகளிடையே மிகவும் பிரபலமானவர். இவரை நினைத்தாலே “செண்பகமே..செண்பகமே..” பாடல்தான் பலருக்கும் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு இவர் நடித்த படங்களும் அதில் இடம் பெற்றிருந்த பாடல்களும் மக்களின் மனங்களில் இடம் பெற்றிருக்கின்றன. இவர், பிரபல நடிகர் நளினியின் முன்னாள் கணவர். தற்போது இவருக்கு 62 வயதாகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு, மேதை எனும் படத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு சில காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தற்போது ஆர்.ராகேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இதில், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு காலத்தில் ராமராஜன் ‘மக்கள் நாயகன்’ என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்தில் விஜய் இருப்பது உறுதி..? இதுதான் அவர் கதாப்பாத்திரத்தின் பெயர்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ