'தலைவர் 169' அப்டேட்டை வெளியிட்ட ரெடின் கிங்ஸ்லீ!

நெல்சன் 'தலைவர் 169' படத்துக்கான பணிகளை தீவிரமாக செய்துகொண்டு இருப்பதாக நடிகர் ரெடின் கிங்ஸ்லீ கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 15, 2022, 02:21 PM IST
  • நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார்.
  • இந்த ஆண்டுக்குள் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
  • சமீபத்தில் இவர் இயக்கத்தில் பீஸ்ட் படம் வெளியாகி இருந்தது.
'தலைவர் 169' அப்டேட்டை வெளியிட்ட ரெடின் கிங்ஸ்லீ! title=

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததையடுத்து, ரஜினியை வைத்து 'தலைவர் 169' படத்தை நெல்சன் இயக்குவதாக கூறிய செய்தியை கேட்டு ரசிகர்கள் பலரும் அதிருப்தி அளித்து வந்தனர்.  'தலைவர் 169' படத்தை நெல்சன் இயக்கமாட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் சில போலியான செய்திகள் உலா வந்தது, பின்னர் நெல்சன் தான் இந்த படத்தை இயக்குவார் என்று உறுதிப்படுத்தப்பட்டது.  

மேலும் படிக்க | அஜித் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு படம்!

அதனைத்தொடர்ந்து தலைவர் 169 படம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது இப்படம் குறித்த லேட்டஸ்டான அப்டேட்டை நடிகரும், நெல்சனின் நண்பருமான ரெடின் கிங்ஸ்லி சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்து இருக்கிறார்.  அதில் அவர் கூறுகையில், 'நெல்சன் தலைவர் 169 படத்திற்கான கதையை எழுதுவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார், தற்போது தான் படத்திற்கான முதல் பாதியை எழுதி முடித்து இருக்கிறார்.  அவர் அந்த வெறில இருக்காரு, கண்டிப்பா அடிச்சி தூக்கிடுவாரு' என்று கூறி இருக்கிறார்.  

ரெடின் கிங்ஸ்லி நெல்சனின் நல்ல நண்பர், இதுவரை அவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களில் கிங்ஸ்லி நடித்திருந்தார்.  மேலும் அவர் 'தலைவர் 169' படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.  'தலைவர் 169' படத்தை சான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.  மேலும் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது, அதோடு இதில் சிவகார்த்திகேயன், ரம்யாகிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், யோகி போன்ற நட்சத்திரங்களும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்தப் பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட்! அதுவும் இப்படியொரு ஸ்கெட்ச்சா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News