சீதா ராமன் அப்டேட்: நகையை கண்டு ஆசை கொள்ளும் கல்பனா.. சீதா, சத்யாவுக்கு அடுத்தடுத்து வரும் சந்தேகம்

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2024, 01:34 PM IST
  • நகைகளை பார்க்கும் அர்ச்சனா.
  • அர்ச்சனாவிடம் அச்சத்தில் சுபாஷ்.
  • பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் கல்பனா.
சீதா ராமன் அப்டேட்: நகையை கண்டு ஆசை கொள்ளும் கல்பனா.. சீதா, சத்யாவுக்கு அடுத்தடுத்து வரும் சந்தேகம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவுக்கு எதிராக நான்சியும் சேஷாத்திரியும் கை கோர்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

நகைகளை பார்க்கும் அர்ச்சனா

அதாவது, ராமும் சீதாவும் ரூமுக்குள் முதல் பங்க்ஷன் நடக்க போவதை நினைத்து சந்தோஷமாக பேசி கொண்டிருக்க இன்னொரு பக்கம் கல்பனா அர்ச்சனாவின் நகைகளை எடுத்து பார்த்து சந்தோசப்படுகிறாள். இவ்வளவு நகை இருக்கா என்று எல்லாத்தையும் எடுத்து போட்டு பார்த்து நகைகள் மீது ஆசைப்படுகிறாள். 

அர்ச்சனாவிடம் அச்சத்தில் சுபாஷ்

அடுத்து நைட் நேரத்தில் சுபாஷ் ரூமுக்குள் வந்ததும் அர்ச்சனாவை நெருங்க நினைக்க வாங்கிய அடி ஞாபகத்திற்கு வர பயந்து போகிறான். மறுநாள் காலையில் அர்ச்சனா மீண்டும் நகைகளை எடுத்து போட்டு பார்த்து கொண்டிருக்க சத்யா வந்து மடியில் படுத்து கொள்ள அவள் தூங்கிய பிறகு மீண்டும் நகைகளை எடுத்து பார்த்து கொண்டிருக்க சந்தியாவிற்கு சந்தேகம் வருகிறது. 

மேலும் படிக்க | Singapore Saloon OTT: சிங்கப்பூர் சலூன் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்? முழு விவரம்..

பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் கல்பனா

சீதாவும் அர்ச்சனா கெட்டப்பில் இருக்கும் கல்பனா நகைகளை எடுத்து போட்டு பார்த்து கொண்டிருப்பதை பார்த்து சந்தேகத்துடன் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க கல்பனா பதில் சொல்ல முடியாமல் தவிக்க நான்ஸி அந்த இடத்திற்கு வருகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? கல்பனா சிக்கி கொள்வாளா? என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | வாவ் என்று சொல்ல வைக்கும் செல்வராகவனின் கிளாஸ் படங்களின் பட்டியல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News