சீதா ராமன் அப்டேட்: கடத்தப்பட்ட சீதா.. மகா போடும் டிராமா, சேது எடுத்த முடிவு!!

Seetha Raman Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 13, 2023, 01:32 PM IST
  • சீதாவை ஏமாற்றும் ராமின் தங்கைகள்.
  • மகா மீது சந்தேகப்படும் துரை .
  • சீதாவை கடத்திச்செல்லும் ரவுடிகள்.
சீதா ராமன் அப்டேட்: கடத்தப்பட்ட சீதா.. மகா போடும் டிராமா, சேது எடுத்த முடிவு!! title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் கடந்த வாரம் மகா சீதாவை கடத்த பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சீதாவை ஏமாற்றும் ராமின் தங்கைகள்

அதாவது சீதா ராமின் தங்கைகளுடம் காலேஜ் செல்ல இவர்கள் வழியில் காரை நிறுத்தி தண்ணீர் வேண்டும் என்று கேட்க சீதா தண்ணீர் பாட்டில் வாங்க போன சமயத்தில் காரை எடுத்து கொண்டு கிளம்பி விடுகின்றனர். அதனை தொடர்ந்து சீதா துரைக்கு போன் செய்து மூன்று பேரும் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக சொல்கிறாள். 

மகா மீது சந்தேகப்படும் துரை 

அதற்குள் ரவுடிகள் சீதாவை ரவுண்ட் கட்டி விட போனும் கீழே விழுந்து தொடர்பில்லாமல் போக துரைக்கு மகா மீது சந்தேகம் வருகிறது. உடனே மகாவிடம் சென்று கேட்க அவள் ஒன்றுமே தெரியாமல் பதறுவது போல் நடித்து தனது மகளுக்கு போன் போட்டு கேட்க தண்ணீர் வாங்கிட்டு வர போனாங்க , அப்புறம் வரவே இல்ல என்று சொல்ல சேது ஷாக் ஆகிறார். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: “ஐஷூ வெளியேறிதற்கு காரணம் இதுதான்..” நிக்ஸன் சொன்ன சர்ச்சை கருத்து!

சீதாவை கடத்திச்செல்லும் ரவுடிகள்

இங்கே சீதாவை ரவுடிகள் கடத்தி கொண்டு செல்ல சேது போலீஸ் உயரதிகாரிக்கு போன் செய்து சீதாவை கண்டுபிடிக்க சொல்ல மகாவும் சீக்கிரம் கண்டுபிடிங்க என நாடகம் போடுகிறாள். அங்கே சீதா ரவுடிகளிடம் தப்பிக்க முயற்சி செய்து மீண்டும் சிக்கி கொள்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | வசூலில் தட்டுத் தடுமாறும் கார்த்தியின் ஜப்பான்.. மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News