அஜித் மனைவி ஷாலினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

Shalini Ajith Kumar Net Worth: நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் சொத்து மதிப்புபற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 21, 2023, 08:51 AM IST
  • குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி.
  • அஜித்குமாருக்கும் 'அமர்க்களம்' படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்தது.
  • ஷாலினி தற்போது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
அஜித் மனைவி ஷாலினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?  title=

ஷாலினியின் சொத்து மதிப்பு விவரம்: நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஷாலினி அஜித்குமார்:
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி. இதைத்தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு வெளியான 'காதலுக்கு மரியாதை' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தளபதி விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்த இந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதற்கு அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான 'அலைபாயுதே' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். 

மேலும் படிக்க | அடேங்கப்பா.. பாக்ஸ் ஆபிஸில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மாஸ் கலக்கல்

இதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்த ஷாலினிக்கும் அஜித்குமாருக்கும் (Shalini Ajithkumar) 'அமர்க்களம்' படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் 2000 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதினிடையே பிரஷாந்த் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான 'பிரியாத வரம் வேண்டும்' திரைப்படம் தான் ஷாலினி கடைசியாக நடித்த படம். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஷாலினி தற்போது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து அஜித் - ஷாலினி ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்தது. அவர் பெயர் அனோஷ்கா. இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஆத்விக் என்கிற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ஷாலினி. இதில் அனோஷ்காவிற்கு தற்போது 15 வயதாகிறது.சமீப காலமாக அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோரின் புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி நடிகை ஷாலினிக்கு ஷாமிலி என்கிற தங்கையும், ரிச்சர்டு ரிஷி என்கிற தம்பியும் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் நடித்துள்ளனர்

 

 

ஷானிலி அஜித்குமார் சொத்து மதிப்பு:
இந்நிலையில் ஷாலினி தனது 43வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நேரத்தில் அவரின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஷாலினிக்கு சொந்தமாக ரூ.50 கோடிக்கு சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. ஷாலினி சிறுவயதில் இருந்த சினிமாவில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சினிமாவில் கடைசியாக கதாநாயகியாக நடித்த போது ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

நடிகை ஷாலினியின் கணவர் அஜித்குமார், தமிழ் சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் ஒரு படத்தில் 130 லட்சம்20சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.300 கோடிக்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்-இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News