பிரபல இசையமைப்பாளர் மகனுடன் சிவாங்கியின் ரொமான்ஸ் பாடல் வீடியோ வைரல்

பிரபல இசையமைப்பாளர் மகனுடன், சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி ரொமான்ஸ் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 5, 2022, 09:01 PM IST
பிரபல இசையமைப்பாளர் மகனுடன் சிவாங்கியின் ரொமான்ஸ் பாடல் வீடியோ வைரல் title=

குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை, வெள்ளித்திரையில் கலக்கி வரும் சிவாங்கி, தற்போது பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் மகனுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை தன்னுடைய youtube பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அடிக்கடி ஆல்பம் பாடல்களை பாடி யூடியூப் பக்கத்தில் வெளியிடும் சிவாங்கி, தற்போது பிரபல இசையமைப்பாளராக இருக்கும் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்த்தனுடன் இணைந்து பாடலை பாடியிருப்பதுடன், கவர் சாங்கிற்காக ரொமான்ஸூம் செய்துள்ளார்.

மேலும் படிக்க | Bigg Boss Tamil 6: தலைவர் பதவிக்கு போட்டா போட்டி, இப்படி ஒரு டாஸ்க் ஆ..

அந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்துள்ளது. 23 வயது ஆகும் வித்தியாசாகரின் மகன் ஹர்ஷவர்த்தன் உடன் இணைந்து சிவாங்கி அடிக்கடி ஆல்பம் பாடல்களை பாடி அதை வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் பல லட்சம் பார்வையாளர்களை பெற்று வருகிறது. இப்போது ஹர்ஷவர்த்தனுடன் இணைந்து செம்ம ரொமான்ஸ் செய்திருக்கும் சிவாங்கியின் வீடியோவும் குறிப்பிடத்தகுந்த பார்வைகளை பெற்றுக் கொண்டிருக்கிறது. வீடியோவில் நடனமும் ஆடியிருக்கிறார் சிவாங்கி.

சூப்பர் சிங்கரில் அறிமுகமான அவர், அந்த போட்டியில் டைட்டிலை வெல்லாவிட்டாலும் இதயத்தை வென்றார். அதன் தொடர்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அறிமுகமானார் சிவாங்கி. இதில் இவருடைய சுட்டித்தனம் மற்றும் வெள்ளந்தி குணம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து தமிழகத்தின் சின்னத்திரையின் செல்லப்பிள்ளையாக உருவெடுத்தார். டான் படம் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த அவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. அதில் தனக்கு செட்டாகும் கேரக்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.

மேலும் படிக்க | 'தளபதி 67' படத்தின் மாஸான லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News