ரஜினிக்காக 7 நாட்கள் சாப்பிடாமல் இருந்த ஸ்ரீதேவி! சுவாரஸ்ய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக நடிகை ஸ்ரீதேவி 7 நாட்கள் சாப்பிடாமல் இருந்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்து சுமார் 25 படங்கள் நடிதுள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 13, 2022, 02:46 PM IST
  • 72வது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்
  • நடிகை ஸ்ரீதேவி சூப்பர் ஸ்டார் மீது கொண்டிருந்த பாசம்
  • அவர் குணமடைய வேண்டி 7 நாட்கள் உண்ணாவிரதம்
ரஜினிக்காக 7 நாட்கள் சாப்பிடாமல் இருந்த ஸ்ரீதேவி! சுவாரஸ்ய தகவல் title=

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகையே ஆட்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 12 ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பிறந்தநாளையொட்டி அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் தங்களின் வாழ்த்து மழைகளை பொழிந்திருக்கும் நிலையில், நடிகை ஸ்ரீதேவி அவருக்காக 7 நாட்கள் சாப்பிடாமல் இருந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நடிகை ஸ்ரீதேவியும் சுமார் 25 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி ஜோடி

தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களும் இதில் அடங்கும். 72 வயதான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே கிட்டதட்ட மெஹா ஹிட் வெற்றியை பெற்றன. இருவரும் திரையில் சூப்பர் ஜோடி என கொண்டாடப்பட்டனர். அப்போது, இவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் அதிகம் பரவிக் கொண்டே இருந்தது. திரையில் சூப்பரான ஜோடியாக இருந்த நிலையில், வாழ்க்கையில் இருவரும் மாறா அன்புடன் தங்களது பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கினர்.

மேலும் படிக்க | Poonam Bajwa: 7ஆம் வகுப்பு மாணவனின் லீலை..பூனம் பாஜ்வாவுக்கு லவ் லெட்டர்

ஸ்ரீதேவி 7 நாட்கள் உண்ணாவிரதம்

ரஜினிகாந்துக்கு 2011 ஆம் ஆண்டு உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. ராணா படப்பிடிப்பில் இருக்கும்போது அவருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பால், உடனடியாக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்காக உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீதேவியும் ஒருவர். மும்பையில் இருந்த ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தாராம். உடனடியாக புனேவில் இருந்த ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று ரஜினிக்காக பிரார்த்தனை செய்தாராம்.

ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டி 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீதேவி, இதனைப் பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை. ரஜினிகாந்த் குணமடைந்த பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம் இந்த தகவலை ஸ்ரீதேவி பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

ஸ்ரீதேவி - போனிக்கபூர்

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியாகி இருந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சென்றார். அங்கு அவருக்கு பிரபல சினிமா தயாரிப்பாளர் போனிக்கபூருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அவர் இந்த பூவுலகில் இல்லையென்றாலும், ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவி நடித்த படங்கள் அனைத்தும் கிளாசிக் ஹிட்டாக எப்போதும் இருக்கும்.

மேலும் படிக்க | தளபதி 67 படத்தில் இத்தனை மாஸ் ஹீரோக்களா.. வெளியான மாஸ் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News