தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரக வலம் வந்த நடிகர் கிருஷ்ணா (79). 5 தசாப்தங்களாக தெலுங்கு திரையுலகை ஆண்ட கிருஷ்ணா, பல்வேறு மொழிகளில் மொத்தம் 350 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.
இவருக்கு நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், சற்று நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலை சற்றுநேரத்தில் மீண்டும் மோசமாகியுள்ளது.
மருத்துவர்கள் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்துள்ளது. இதனால், தெலுங்கு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில், மகன் மகேஷ் பாபு உள்ளிட்ட அவரின் குடும்பத்தினருக்கு பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிப்போகிறதா 'வாரிசு' படம்?
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கிருஷ்ணா, முதலில் இந்திரா தேவி என்பவரையும், இரண்டாவதாக விஜயா நிர்மலா என்பவரையும் மணந்துகொண்டார்.
இதில், விஜயா நிர்மலா 2019ஆம் ஆண்டு காலாமானர். மேலும், கடந்த மாதம், கிருஷ்ணாவின் முதல் மனைவி இந்திராவும் உயிரிழந்தார். கிருஷ்ணாவுக்கு மொத்தம் 5 பிள்ளைகள். ரமேஷ் பாபு, மகேஷ் பாபு, பத்மாவதி, மஞ்சுளா, பிர்யதர்ஷினி என ஐந்து பேரில், மூத்தவர் ரமேஷ் பாபு இந்தாண்டு ஜனவரி மாதம் காலமானார்.
மறைந்த நடிகர் கிருஷ்ணா, 1961ஆம் ஆண்டு தனது முதல் படத்தில் நடித்தார். தொடர்ந்து, 1965ஆம் ஆண்டு, கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, அவர் பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார். 1972ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பண்டாண்டி கபுரம் என்ற திரைப்படம், தேசிய அளவில் சிறந்த முழுநீள திரைப்படத்திற்கான விருதை வென்றது.
Saddened by the passing away of #SuperStarKrishna Garu.
He left an indelible mark on Indian Cinema through his prolific artistry. The coming generations will remember him fondly for his classic movies.
Condolences to his family and admirers. Om Shanti.#MaheshBabu | #RIPLEGEND pic.twitter.com/MSK5uBYwrN
— P C Mohan (@PCMohanMP) November 15, 2022
அல்லூரி சீத்தாராம ராஜூ, சிம்ஹாசனம், கோதாசாரி 116, ஜேம்ஸ் பாண்ட 777 உள்ளிட்ட பல படங்கள் பெரும் வெற்றிகளை குவித்தன. சினிமா மட்டுமில்லாமல் அவர் அரசியலிலும் சிறிதுகாலம் பணியாற்றினார். தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு அரசியலில் இருந்தும் ஓய்வுபெற்றார். அவர் நடித்த காலத்தில், அதிக சம்பளம் பெற்ற நடிகர்களுள் அவரும் ஒருவர்.
மேலும் படிக்க | பிரபல சூப்பர் ஸ்டாரின் தாயார் மரணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ