Thalaivar 171 Update : ரஜினிகாந்தின் 171வது படத்தை, தமிழ் திரையுலகின் டாப் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகள் நடைப்பெற்று வரும் நிலையில், இது குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
தலைவர் 171 படத்தில் இவரா..?
தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், இந்த படத்தை இயக்குகிறார். தற்போது அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இதில் ஒரு பிரபல பாலிவுட் நடிகர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, ரன்வீர் சிங்தான். பிரபல நடிகை தீபிகா படுகோனின் கணவரான இவர், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். இவர், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து முதல் முறையாக இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது, அவருக்கு பெரிய பான்-இந்திய ரிலீஸாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. பிற பாலிவுட் நடிகர்களுடன் ஒப்பிடுகையில், ரன்வீர் சிங்கின் அதிகமான படங்கள் ஹிட் ஆகவில்லை என்றாலும், இவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை ரசிகர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.
மேலும் படிக்க | சிறுவயதில் செம க்யூட்டா இருக்கும் இந்த செலிபிரிட்டி ஜோடி யாரென்று தெரிகிறதா?
அடுத்த ‘லியாே’ வாக மாறிவிடுமோ?
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘லியோ’ திரைப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. இதற்கு காரணம், படத்தில் இடம் பெற்றிருந்த பெரிய நடிகர்களுக்கு ஏற்ற பெரிய வேலை இல்லை என்பதுதான். அது மட்டுமன்றி, படத்தின் மீது ரசிகர்கள் கொண்டிருந்த அதீத எதிர்பார்ப்பும் ஏமாற்றத்திற்கு காரணமாக இருந்தது. இதனால், அடுத்த படத்தில் இதை திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன் என கூறிய லோகேஷ் கனகராஜ், அதற்கான பணியையும் சரியாக செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லியோ படம் போலவே இதிலும் ஒரு இந்தி நடிகரை இணைத்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. லியோ படத்தில் சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், அர்ஜுன், மிஷ்கின் உள்பட எக்கச்சக்கமான பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
இவரும் இருக்கிறாரா?
தலைவர் 171 படத்தில் சாண்டி மாஸ்டரும் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் ஒரு நேர்காணலில் பேசிய அவர், தன்னை தலைவர்171 படத்தில் நடிக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டதாக கூறியிருக்கிறார்.
இதுதான் டைட்டிலா?
தலைவர் 171 படத்தின் டைட்டில் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு ‘கழுகு’ என பெயர் வைக்க இருக்கின்றனராம். ஏற்கனவே, காக்கா கழுகு பிரச்சனை விஜய்-ரஜினி ரசிகர்கள் மத்தியில் நடைப்பெற்று வரும் நிலையில், தற்போது இந்த வகையிலான டைட்டில் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மனைவி குறித்த கேள்விக்கு டென்ஷனான லோகேஷ் கனகராஜ்! என்ன சொன்னார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ