Thalaivi Trailer: அசத்தல் வசனங்களுடன் "தலைவி" பட டிரெய்லர் வெளியானது!

‘தலைவி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 23, 2021, 02:18 PM IST
Thalaivi Trailer: அசத்தல் வசனங்களுடன் "தலைவி" பட டிரெய்லர் வெளியானது! title=

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் (J Jayalalitha) வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தில் கங்கனா ரனாவத் (Kangana Ranaut) மற்றும் அரவிந்த் சாமி நடித்துள்ளனர். இதில் கங்கனா ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 

தலைவி (Thalaivi) படத்தில் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) இசையமைக்கிறார். பாகுபலி படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். 

ALSO READ | 'தலைவி' படத்தின் டிரெய்லருடன் கங்கனாவின் புகைப்படங்கள் வைரல்!

இந்த படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தலைவி திரைப்படத்தில் கங்கணா ரணாவத் நான்கு தோற்றங்களில் நடிப்பதால் அவருக்கு ஒப்பனை செய்ய கேப்டன் மார்வெல் படத்தில் பணியாற்றிய ஜேசன் காலின்ஸை படக்குழு ஒப்பந்தம் செய்தது. 

இந்த படம் ஏப்ரல் 23-ம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் டிரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா (J Jayalalitha) திரைப்படங்களில் இருந்து அரசியலுக்கு வந்தது, அவர் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவை இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ALSO READ | MGR நினைவு நாளில் வைரலாகும் அரவிந்த் சாமியின் MGR Look ...!!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News