ராஜ்கிரணின் இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனசிலே படம் மூலம் வடிவேலு திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த அத்தனை படங்களிலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டினார். இதனால் அடுத்தடுத்து வடிவேலுவுக்கு ஏறுமுகம்தான். காமெடியில் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். காமெடி, குணச்சித்திரம் மட்டுமின்றி பாடுவது நடனம் ஆடுவது என வடிவேலு தான் இறங்கிய மைதானத்தில் எல்லாம் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கினார். குறிப்பாக 90களின் இறுதியிலிருந்து அடுத்ததாக 20 வருடங்கள் வடிவேலு இல்லாத படங்களே இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியேக்கூட சந்திரமுகி படம் ஆரம்பிக்கும்போது அதன் இயக்குநர் பி.வாசுவிடம் முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்குங்கள் என்றார். அந்த அளவு வடிவேலு அப்போது பிஸி.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என யாருடன் நடித்தாலும் வடிவேலுவின் காம்போ அதிரிபுதிரி ஹிட்டடித்தது.இப்படி சென்றுகொண்டிருர்ந்த வடிவேலு கதாநாயகனாக அறிமுகமாகி மற்ற காமெடியன்களும் கதாநாயகனாக ஜெயிக்கலாம் என்ற விதையையும் போட்டார். கவுண்டமணி கதாநாயகனாக நடித்தும் வெற்றிப்பெற முடியவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இப்படி அசுர வேகத்தில் சுழற்றியடித்த வைகை புயல் அரசியலில் களம் இறங்கினார். அங்கிருந்து அவருக்கு புயலின் வலு குறைந்து ஒருகட்டத்தில் திரையில் காணாமலே போனது. இருந்தாலும் அனைத்து வீடுகளின் டிவிக்களில் வடிவேலுவின் காமெடி ஓடிக்கொண்டிருக்க காலம் டிஜிட்டல் காலமாக மாறியது. இனி வடிவேலு அவ்வளவுதான் என பலர் ஆரூடம் கூறிக்கொண்டிருக்க மீம்ஸ்களிலும் வைகை புயலே வீசியது. அப்போதுதான் பலரும் புரிந்துகொண்டனர் வடிவேலு என்ற கலைஞனுக்கு அழிவே இல்லை என்று.
ஒருவழியாக வடிவேலுவை சுற்றி இருந்த அனைத்து பஞ்சாயத்துக்களும் முடிந்து மீண்டும் திரையில் களமிறங்கியிருக்கிறார். அந்தவகையில் அவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துவருகிறார். அதில் அவருக்கு மிகச்சிறந்த கதாபாத்திரம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருக்கிறார்.
மேலும் படிக்க | வருங்கால கணவரின் முதல் திருமணத்திலேயே நடனமாடிய ஹன்சிகா... வைரலாகும் வீடியோ
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் அடுத்ததாக ராம்பாலா இயக்கும் படத்ஹ்டில் நடிக்கிறார். இதில் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் காமெடியனாக இல்லையாம் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். படத்தின் கதையை வடிவேலுவுக்கு இயக்குநர் கூறிவிட்டதாகவும் அது அவருக்கு பிடித்துவிட்டதால் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டுவிட்டார் எனவும் கோலிவுட்டில் பேசப்பட்டுவருகிறது.
இதுவரை காமெடியன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என அனைத்து ஏரியாவிலும் சொல்லியடித்த வைகை புயல் வில்லன் ஏரியாவிலும் பட்டையை கிளப்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata