நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. விஜய்யின் முதல் பான் இந்தியா ரிலீஸாக அமைந்த பீஸ்ட் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க வெளியானது.
தியேட்டர்கள் மட்டுமல்லாமல் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கும் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. நேரடியாக ஓடிடிக்கு வரும் படங்கள் மட்டுமல்லாமல் திரையில் வெளியாகி ஓடிடிக்கு வரும் பெரிய படங்களுக்கும் வியாபார ரீதியாக நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் அதை அதிக நாட்கள் தியேட்டரில் திரையிடமுடியாத சூழல் உள்ளது. அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருந்துவருவதே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் திரைக்கு வரும் படம் ஒன்றை படக்குழு ஓடிடிக்கு எப்போது வழங்கலாம் என விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பீஸ்ட் படம் ஓடிடிக்கு எப்போது வரும் எனும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது. அந்த வகையில் இப்படம் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளதாம். மே 11ஆம் தேதி ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ‘KGF-2’ டீம் செய்த தவறால் கொந்தளிக்கும் தமிழ் ரசிகர்கள்- காரணம் என்ன?
50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகளில் வெளியான விஜய்யின் முந்தைய படமான மாஸ்டர், அமேசான் ப்ரைம் ஓடிடியில் படம் வெளியான 3 வாரங்களிலேயே ரிலீஸ் ஆனது. ஆனால் பீஸ்ட் படம் 4 வாரங்கள் கழித்து வெளியாகவுள்ளதாகக் கூறப்படுவதால் ஓடிடியில் வியாபார ரீதியாக வெற்றி கிடைக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டுல எந்தக் காட்சிகளை நீக்குனாங்கனு தெரிஞ்சிக்கணுமா? இதைப் படிங்க!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR