தமிழகம் முழுவதும் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் விஜய்யின் முதல் பான் - இந்தியா ரிலீஸ் படம் எனும் சிறப்பையும் பெற்றுள்ளது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளிலும் இப்படம் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அத்துடன் இதில் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | கத்தார், குவைத்தை தொடர்ந்து தமிழகத்திலும் 'பீஸ்ட்'க்கு தடை - ரசிகர்கள் அதிர்ச்சி!
இதற்கிடையில் பெரும்பாலான திரையரங்குகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு பீஸ்ட் திரைப்பட ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கம், ராஜேஸ்வரி திரையரங்கம், வெற்றி திரையரங்கம், காசி திரையரங்கம் உள்ளிட்ட பல திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் ஆரம்பமாகி உள்ளன. இதற்கிடையில் சென்னை குரோம்பேட்டில் உள்ள வெற்றி தியேட்டரில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் காட்சியை இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் அதிகாலை காட்சியை கண்டனர்.
இந்த நிலையில் தாம்பரம் வித்தியா திரை அரங்கில் வெளியான பீஸ்ட் படம் பார்த்தவர்களுக்கு விஜய் முன்னால் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விஜய் ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுகு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் 100 பேரூக்கு வழங்கினார். இதனால் படம் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வழங்கிய பெட்ரோலுடன் சென்றனர்.
நீண்ட நாளுக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த படம் வெளியாகி உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் பெட்ரோல் இலவசமாக படம் பார்க்க வந்தவர்களுக்கு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR