விக்ரம் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி போட்டுடைத்த விஜய் சேதுபதி!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் தான் வில்லனாக நடித்தது பற்றி நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 9, 2022, 10:52 AM IST
  • விக்ரம் படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.
  • இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்துள்ளனர்.
  • லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார்.
விக்ரம் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி போட்டுடைத்த விஜய் சேதுபதி! title=

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் சிறப்பான பெயரை பெற்ற நடிகர் விஜய் சேதுபதி, கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்போது வில்லனாகவும் புதிய பரிமாணத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார்.  ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார், அதேபோல தெலுங்கு படமான 'உப்பன்னா' படத்திலும் இவர் வில்லனாக நடித்திருந்தார்.  தொடர்ந்து இதுபோன்று வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீஸ்!

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுபோன்று மனிதனின் மற்றொரு இருண்ட பக்கத்தை காட்டுவது எனக்கு பிடித்தமான ஒன்று.  நான் வில்லனாக நடிப்பதை திரையில் பார்ப்பதன் மூலம் என் நிஜ வாழ்க்கையில் வாழ முடியாத ஒரு வாழ்க்கையை வாழ்வது போன்று உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.  மேலும் கூறுகையில் திரையில் காண்பிக்கப்படும் எந்த வில்லன்களின் நடிப்பும் ஒரே மாதிரியாக இருக்காது.  மாஸ்டர் மற்றும் உபென்னா படத்தில் எனது கதாபாத்திரம் ஒரே மாதிரியாக இருந்திருக்காது.  அதேபோல தான் விக்ரம் படத்திலும் என்னுடைய நடிப்பும் இருக்கும், ஒரு மனிதனின் மிகவும் மோசமான பக்கத்தை தெளிவாக காட்டியிருப்பேன் என்று கூறினார்.

Vijaysethupathi

மேலும் ஜூன் மாதம் வெளியாகவுள்ள இந்த விக்ரம் படத்தை காண நான் மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன்.  விக்ரம் படத்தில் ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் பஹத் பாசில் போன்ற இரண்டு சிறப்பான நட்சத்திரங்கள் உள்ளனர், என்னால் முடிந்த சிறப்பானவற்றை நான் இந்த படத்திற்காக கொடுத்திருக்கிறேன் என்று நம்புகின்றேன்.  நான் கமல்ஹாசன் சாரின் மிகப்பெரிய ரசிகர், அவர் பக்கத்திலேயே இருந்து அவருடன் பணியாற்ற எனக்கு இத்தகைய சிறப்பான வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ஏகே 62-ல் வில்லனாக நடிக்கிறேனா? விஜய்சேதுபதியின் பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News