வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய செய்தி!! வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ-க்கள்) தாங்கள் வெளிநாடுகளில் ஈட்டும் பணத்தைக் கொண்டு தாய் நாடான இந்தியாவில் சொத்து வாங்க எண்ணுவது இயல்பான விஷயமாகும். எனினும், இதில் பலருக்கு பல சந்தேகங்கள் இருப்பதுண்டு. என்ஆர்ஐ இந்தியாவில் சொத்து வாங்குவது தொடர்பான இந்திய சட்டங்கள் பற்றிய பரிச்சயம் இல்லாததால், அவர்களுக்கு இங்கு மனை வீடு வாங்குவது கடினமான ஒரு விஷயமாக இருக்கலாம். எனினும், விதிகளை சரியாக புரிந்துகொண்டால், இது ஒரு மிக எளிய செயல்முறை என்பதே உண்மையாகும்.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) நாட்டிற்கு வெளியே வசிக்கும் ஒரு இந்திய குடிமகன் இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், இது ஒரு சில விதிவிலக்குகளுடன் வருகிறது. உதாரணமாக, சொத்து விவசாய நிலமாகவோ, பண்ணை வீடாகவே (farmhouse) அல்லது தோட்டச் சொத்தாகவோ இருக்கக்கூடாது. விலக்கு அளிக்கப்பட்ட சொத்துக்கள் அன்பளிப்பாகவோ அல்லது மரபுரிமையாகவோ இருந்தால், அத்தகைய சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமையாளராக என்ஆர்ஐ-களுக்கு அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவைப்படும்.
என்ஆர்ஐ-கள் இந்தியாவில் வசிக்கும் ஒருவருக்கு எந்த அசையாச் சொத்தையும் மாற்றலாம். அவர்கள் விவசாய நிலம், தோட்ட சொத்துக்கள் அல்லது பண்ணை வீடுகள் தவிர மற்ற அசையா சொத்துக்களை இந்திய குடிமகன் அல்லது இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் பிஐஓ-க்கு மாற்றலாம்.
மேலும் படிக்க | NRI: கடந்த 3 ஆண்டுகளில் 3,92,000 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்
ஆர்பிஐ விதிகள்
அசையாச் சொத்தைக் கையாளும் என்ஆர்ஐ-களுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள சில விதிகள் பற்றி இங்கே காணலாம்:
- என்ஆர்ஐ-கள் அசையா சொத்துக்களை வாங்குவதற்கு பணம் செலுத்தலாம்.
- இந்தியாவிற்கு வெளியே உள்ள எந்த இடத்திலிருந்தும் உள்நோக்கி பணம் அனுப்புவதன் மூலமாகவோ அல்லது அவரது NRE/FCNR(B)/NRO கணக்கில் டெபிட் செய்வதன் மூலமாகவோ இந்தியாவில் சாதாரண வங்கி வழிகள் மூலம் நிதியைப் பெறலாம்.
- ரிசர்வ் வங்கியின்படி குறிப்பாகக் குறிப்பிடப்பட்டவை தவிர, பயணிகளின் காசோலை, வெளிநாட்டு நாணயத் தாள்கள் அல்லது பிற முறைகள் மூலம் இத்தகைய பணம் செலுத்த முடியாது.
- பொது அனுமதியின் கீழ் குடியிருப்பு/வணிகச் சொத்தை வாங்கிய என்ஆர்ஐ, ரிசர்வ் வங்கியில் எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யத் தேவையில்லை.
அனைத்து கட்டணங்களும் இந்திய நாணயத்தில் செலுத்தப்பட வேண்டும். என்ஆர்ஐ கணக்கு வழியாக வங்கி சேனல்கள் மூலம் இவை செய்யப்பட வேண்டும். என்ஆர்ஐ-கள் சொத்துகளை வாங்க தங்கள் நிதியைப் பயன்படுத்தலாம் அல்லது வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களிடமிருந்து வீட்டுக் கடன்களைப் பெறலாம். என்ஆர்ஐ உட்பட சொத்து வாங்குபவர்கள், மொத்த சொத்து மதிப்பில் 80% நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்கள் மூலம் பெற ஆர்பிஐ அனுமதிக்கிறது.
வரி தாக்கங்கள்
சொத்துக்களைப் பெறுவதில் வரி தாக்கங்கள் உள்ளன. இவற்றை நன்றாகப் புரிந்து கொள்ள, வருமான வரிச் சட்டத்தின்படி விற்பனையாளர் இந்தியாவில் வசிப்பவரா அல்லது குடியுரிமை பெறாதவரா என்பதை அடையாளம் காண்பது அவசியம். இந்தியாவில் அசையா சொத்தை வாங்கும் என்ஆர்ஐ, சொத்தை விற்கும் நபரின் குடியிருப்பு நிலை மற்றும் மூலதன ஆதாயங்களின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும் டிடிஎஸ்-ஐ கழிக்க வேண்டும்.
என்ஆர்ஐ-களுக்கான விதிகள்
- என்ஆர்ஐ-கள் இந்தியாவில் விவசாய நிலம், பண்ணை வீடு அல்லது தோட்ட சொத்துக்களை வாங்க முடியாது
- என்ஆர்ஐ, குடியுரிமை பெறாதவர்களிடமிருந்து சொத்து வாங்கினால், எல்டிசிஜி பொருந்தினால், 20% டிடிஎஸ் கழிக்கப்பட வேண்டும்.
- இந்தியாவில் வசிப்பவரிடமிருந்து வாங்கும்போது, விற்பனை விலை ரூ. 50 லட்சத்தைத் தாண்டினால், என்ஆர்ஐ 1% டிடிஎஸ்-ஐக் கழிக்க வேண்டும்.
- என்ஆர்ஐ-கள் சொத்தின் ஒட்டுமொத்த மதிப்பில் 80% வரை வீட்டுக் கடன்களை பெறலாம்.
மேலும் படிக்க | UAE: இந்தியருக்கு வந்த அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ