இலங்கை: ஷாக்கில் மக்கள்!! இன்று முதல் மின்சார கட்டணம் 66% அதிகரிப்பு!!

Sri Lanka: மத வழிபாட்டுத் தலங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் துறைகள், பொதுப்பணித்துறை, ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மின்கட்டணம் மற்றும் நிலையான கட்டணங்களை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 15, 2023, 04:05 PM IST
  • இலங்கை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.
  • இன்று முதல் மின்சார கட்டணம் அதிகரிப்பு.
  • புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பல தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கை: ஷாக்கில் மக்கள்!! இன்று முதல் மின்சார கட்டணம் 66% அதிகரிப்பு!! title=

இலங்கை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!! இன்று, அதாவது பிப்ரவரி 15 முதல் மின்சாரக் கட்டணத்தை 66% அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தலைவர். ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய திருத்தத்தின்படி, உள்நாட்டு பிரிவின் கீழ் அசல் 30 அலகுகளுடன் (யூனிட்டுகள்) ஒப்பிடுகையில், தற்போது ஒரு அலகு 8 ரூபாய் கட்டணம் 30 ரூபாயாக அதிகரிக்கப்படும். மேலும் 31 முதல் 60 அலகுகளுக்கு ரூ.10 முதல் ரூ.37 ஆகவும், 61 முதல் 90 அலகுகளுக்கு ரூ.16 முதல் ரூ.42 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 அலகு வரையிலான பிரிவினருக்கு ரூ.50 மற்றும், 121 முதல் 180 அலகு வரையிலான பிரிவினருக்கு தற்போதைய கட்டணமான ரூ.50, 181 அலகுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுக்கும் ரூ.75 என்ற தற்போதைய கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும் படிக்க | துருக்கி, சிரியா நிலநடுக்க நிவாரணத்திற்காக ரூ.11 கோடி நன்கொடை அளித்த என்ஆர்ஐ தொழிலதிபர்

மேலும், நிலையான கட்டணங்களும் அதிகரிக்கும். அதன்படி 

- முதல் 30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் ரூ.400 வரையிலும், 
- 31 – 60 வரையிலான அலகுகளுக்கு ரூ.550, 
- 61 – 90 வரையிலான அலகுகளுக்கு ரூ.650 வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 

- 91 முதல் 120 அலகு வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1,500 ரூபாயாகவும், 
- 121 முதல் 180 அலகு வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

மத வழிபாட்டுத் தலங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் துறைகள், பொதுப்பணித்துறை, ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மின்கட்டணம் மற்றும் நிலையான கட்டணங்களை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தொழில் துறைக்கு, முதல் 300 அலகு பிரிவின் கீழ் அலகு ஒன்றுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.26 ஆக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், இந்த புதிய மின் கட்டண திருத்தத்திற்கு இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு உட்பட பல தரப்பினர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | துபாய் வாசிகளுக்கு ஒரு நல்ல செய்தி: இனி 24 மணி நேரத்தில் இது கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News