ஐக்கிய அரபு அமீரகத்தில், கேரளா போர்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு இந்தியப் பள்ளி உயர்நிலைத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் பெண்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
அபுதாபியில் உள்ள மாடல் பள்ளியில் அனைத்து 107 மாணவர்களும் 2021-2022 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 49 மாணவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவிற்கு இப்போது தகுதி பெற்றுள்ளனர் என்று பள்ளி முதல்வர் அப்துல் காதர் வி.வி தெரிவித்துள்ளார்.
“107 மாணவர்களும் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் எங்கள் மாணவர்களில் 49 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்பதைச் சொல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் 95 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதாவது 1,200-க்கு 1,140 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | UAE: தொழிலாளர் ஊதிய பிரச்சனைகளை தீர்க்க மனித வள மேம்பாட்டு அமைச்சக தலைமையில் குழு
வளைகுடா பிராந்தியத்தில் ஏறக்குறைய பாதி A+ கிரேடுகள் அவரது நிறுவனத்தில் இருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“எங்களிடம் அறிவியல் பிரிவில் 48 மாணவர்களும், வணிகப் பிரிவில் 59 மாணவர்களும் உள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில், 105 மாணவர்கள் மட்டுமே ஆறு தாள்களிலும் A+ பெற்றுள்ளனர். அவர்களில் 47 பேர் மாடல் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.” என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் இரண்டு மாணவிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.
“வளைகுடா பிராந்தியத்தில், 65 மாணவர்கள் அறிவியல் பிரிவில் ஆறு தாள்களிலும் A+ பெற்றுள்ளனர், அதில் 21 பேர் மாடல் பள்ளியைச் சேர்ந்தவர்கள். அமல் இமான் கே அறிவியல் பிரிவில் 1,200க்கு 1,195 மதிப்பெண்கள் பெற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதலிடம் பிடித்தார். வணிகப் பிரிவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆறு தாள்களிலும் 40 மாணவர்கள் மட்டுமே A+ பெற்றுள்ளனர். அவர்களில் 26 பேர் இந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். ஷெஹ்னா எஸ்என் 1,192 மதிப்பெண்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பெற்றவர்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்றார் அவர்.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியிலும் சிறந்த முடிவுகளைப் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பெற்றோர் என அனைவரது கடின உழைப்பும் உறுதியும் இந்த தேர்வு முடிவுகளை பெற உதவியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சவூதி அரேபியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR