Fiction Books That Change Your Life : கதை புத்தகங்கள் படிப்பதற்கு நம்மில் பலருக்கு பிடிக்கும். அப்படிப்பட்ட புத்தகங்கள் சில, நம் வாழ்வையே மாற்றும் வல்லமை படைத்தவை. அந்த புத்தகங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Fiction Books That Change Your Life : கதை அல்லாத புத்தகங்கள் மட்டும் அல்ல, கதை புத்தகங்களும் நமக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றன. இந்த கதை புத்தகங்களை படிக்கும் போது, நாமே ஏதோ ஒரு உலகிற்குள் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதனால், நாம் பிறருடன் பேசாமலேயே ஒருவருடன் பேசுவது போன்ற உணர்வு ஏற்படும். ஒரு சில புத்தகங்கள், நமக்கு வாழ்க்கையை பற்றிய புரிதலை உருவாக்கி கொடுத்துவிட்டு சென்று விடும். அப்படிப்பட்ட புத்தகங்கள் என்னென்ன தெரியுமா?
To Kill A Mocking Bird : இந்த புத்தகத்தை ஹார்பர் லீ என்பவர் இயக்கியிருக்கிறார். இது, வாழ்வில் நமக்கு புரிதல், மனிதத்துவம், சமூக நீதி ஆகியவற்றை கற்றுக்கொடுக்கும் புத்தகமாக இருக்கிறது.
The Prophet : இந்த புத்தகத்தை கலில் ஜிப்ரான் இயக்கியிருக்கிறார். இந்த புத்தகம், ஒரு அனுபவ கதை புத்தகமாகும். காதல், வேலை போன்ற சாதாரண அனுபவங்களை அற்புதமாக காண்பித்திருக்கும் புத்தகம் இது.
The Little Prince : இந்த புத்தகத்தை Antoine de என்பவர் எழுதியிருக்கிறார். இது ஒரு தத்துவ கதை புத்தகம் ஆகும். சிறு வயதிலேயே இளவரசன் ஆகும் ஒரு சிறுவன் அன்பு, நட்பு, வாழ்க்கையை பற்றி கற்றுக்கொள்ளும் கதைதான் இந்த புத்தகம்.
The Book Thief : இந்த புத்தகத்தை மார்க் சுசாக் என்பவர் எழுதியிருக்கிறார். இரண்டாம் உலகப்போர், அந்த சமயத்தில் ஒரு காதல் வாழ்க்கையில் எப்படி விளையாடியது என்பதை வைத்து இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது.
The Alchemist : இந்த புத்தகத்தை Paulo Coelho எழுதியிருக்கிறார். நம் இதயத்தின் பேச்சை கேட்பது மூலமாக வாழ்வில் எந்த மாதிரியான உயரங்களை அடையலாம் என்பதை கற்றுக்கொள்ள, இப்புத்தகத்தை படிக்கலாம்.
Siddhartha : இந்த புத்தகத்தை ஹெர்மான் என்பவர் எழுதியிருக்கிறார். புத்தர், தனது அடையாளத்தை எப்படி கண்டுகொண்டார் என்பதை வைத்து இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
Life Of Pi: இந்த புத்தகத்தை யான் மார்டெல் எழுதியுள்ளார். நம்பிக்கை, ஆன்மீகம் போன்ற விஷயங்களை பற்றி பேசும் புத்தகம் இது. இதனை படமாகவும் எடுத்திருக்கின்றனர்.
A Man Called Ove: இந்த புத்தகத்தை, ஃப்ரெடிக் பேக்மேன் என்பவர் எழுதியிருக்கிறார். வாழ்வில் அனைவரிடமும் கடுமையாக நடந்துகொள்ளும் ஒருவர், எதிர்பாராமல் சந்திக்கும் சில நபர்கள் மூலம் வாழ்வில் பலர் நல்ல பாடங்களை கற்கிறார். இதுதான் இந்த புத்தகத்தின் கதை.