Books That Will Teach You To Think Smarter : நம்மில் பலருக்கு, புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும் என்றும், வேகமாக யோசிக்க வேண்டும் என்றும் ஆசை இருக்கும். அதனை நிவர்த்தி செய்து கொள்ள சில புத்தகங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Books That Will Teach You To Think Smarter : மனிதர்கள் அனைவருமே, அனைத்தையும் அறிந்து கொண்டு, இந்த உலகில் பிறந்துவிடுவதில்லை. வாழ்வில் சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், சில தவறுகளை செய்துதான் கற்றாக வேண்டும். இது போல, அனுபவ அறிவு வாழ்க்கைக்கு மிகவும் தேவை. அதே போல தேவையான ஒன்று, நாம் புத்தகங்களின் மூலம் பெறும் அறிவு. நாம் ஸ்மார்ட் ஆக யோசிக்க வைக்க சில புத்தகங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Thinking, Fast and Slow: இந்த புத்தகம் இரண்டு சிந்தனை அமைப்புகளை ஆராய்வதாக இருக்கிறது. இது, மனது எப்படி செயல்பட வேண்டும், மூளை எப்படி யோசிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. இதனை டேனியல் கானேமென் எழுதியிருக்கிறார்.
The Power Of Habit: தி பவர் ஆஃப் ஹேபிட் புத்தகத்தை, சார்லஸ் டூஹிக் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், நமது எண்ணங்கள் எப்படி செயல்களாக மாற வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது.
The Innovators Dilemma : தி இன்னொவேட்டர்ஸ் டைலமா புத்தகத்தை, க்லேட்டன் எம்.கிரிச்டென்சன் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், ஒருவர் எப்போதும் எப்படி புதிதாக யோசிக்க வேண்டும், உலகிற்கு ஏற்றவாறு எப்படி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது.
The Art Of Thinking Clearly : தி ஆர்ட் ஆஃப் திங்கிங் க்ளியர்லி புத்தகத்தை, ரால்ஃப் டோபெலி எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், நாம் எடுக்கும் முடிவுகள் எப்படி தெளிவானதாக இருக்க வேண்டும் என்பதை கற்பிக்கிறது.
Super Forecasting : சூப்பர் ஃபோர்கேஸ்டிங் புத்தகத்தை, வாரென் பெர்கர் எழுதியிருக்கிறார். எந்த நேரத்தில், எந்த கேள்வியை கேட்டால் நமக்கு சரியான பதில் கிடைக்கும் என்பதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.
Range: ரேஞ்ச், புத்தகத்தை டேவிட் எப்ஸ்டின் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், ஒரு பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது குறித்தும், புதுமையான சிந்தனைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்தும் சொல்லித்தருகிறது.
மைண்ட் செட்: இந்த புத்தகத்தை, கேரோல் எச்.ட்வெக் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், ஒருவரின் மனநிலையை வளர்க்கவும், பெரிய வெற்றியை தொட எப்படியெல்லாம் யோசிக்க வேண்டும் என்பது குறித்தும் கற்றுக்கொடுக்கிறது.
A More Beautiful Question: அ மோர் பியூட்டிஃபுள் க்வஸ்டின் என்ற புத்தகத்தை வாரென் பெர்கர் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், எப்படி நமது படைப்பாற்றலை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்தும், புதுமையான சிந்தனைகளை எப்படி வளர்ப்பது என்பது குறித்தும் கற்றுக்கொடுக்கும்.