தபால் நிலைய சேமிப்பு கணக்கு விதிமுறையில் மாற்றம்; இதை செய்யாவிட்டால் அபராதம்..!

அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 500 இருப்பு வைத்து இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  • Dec 05, 2020, 14:34 PM IST

உங்களிடம் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு இருந்தால், டிசம்பர் 11 முதல் விதிகள் மாறப்போகின்றன. ஏனெனில் தபால் நிலைய சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை ரூ .50 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தியுள்ளது. பராமரிப்பு கட்டணத்தை தவிர்ப்பதற்காக 11.12.2020-க்குள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாயை டெபாசிட் செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

1 /8

நீங்கள் தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாகும். இந்த ஆண்டு குறைந்தபட்ச கட்டணத்தை தபால் அலுவலக கணக்கில் வைத்திருப்பது அவசியமாகியுள்ளது. ஒரு தபால் அலுவலக கணக்கில் (பிஓ சேமிப்பு கணக்கு) குறைந்தது ரூ.500 வைத்திருப்பது கட்டாயமாகும். இது குறித்து இந்தியா போஸ்ட் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

2 /8

இந்த தகவலின் படி, தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் குறைந்தது ரூ.500 பராமரிக்க இன்னும் 12 நாட்கள் உள்ளன. இந்தியா போஸ்ட் தனது  வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், ‘இப்போது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகை பராமரிப்பது கட்டாயமாகும்.

3 /8

எனவே நீங்கள் உங்கள் கணக்கில் பராமரிப்பு கட்டணத்தை செலுத்த விரும்பினால்  அதை வருகின்ற டிசம்பர் 11-ஆம் தேதிக்கு முன் ரூ.500 க்கு உங்கள் கணக்கில் பராமரிக்கவும் என தெரிவித்துள்ளது.

4 /8

இந்தியா போஸ்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, நிதியாண்டின் இறுதியில் சேமிப்புக் கணக்கில் ரூ.500 குறைந்தபட்ச நிலுவைத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், ரூ.100 கணக்கு பராமரிப்பு கட்டணமாகக் குறைக்கப்படும், மேலும் கணக்கு இருப்பு இல்லை என்றால், கணக்கு தானாக மூடப்படும்.

5 /8

சேமிப்புக் கணக்கில் வழங்கப்படும் வட்டி விகிதம் 4 சதவீதமாகும். வட்டி மாதத்தின் 10-ம் தேதி முதல் மாத இறுதி வரையிலான குறைந்தபட்ச நிலுவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே கணக்கின் இருப்பில் 10-ம் தேதி முதல் மாதத்தின் கடைசி நாள் வரை ரூ.500 க்கு குறைவாக இருந்தால் அந்த மாதத்தில் வட்டி அனுமதிக்கப்படாது.  

6 /8

தரவுகளின்படி, டிசம்பர் 19, 2019 நிலவரப்படி, 13 கோடி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு 500 ரூபாய்க்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கணக்கு வைத்திருப்பவர்களிடம் தகவல் தெரிவிக்கும்படி, தபால் நிலைய இயக்குநர் அனைத்து தபால் நிலையங்களுக்கும் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச இருப்பு குறைக்கப்படுவதால் தபால் அலுவலகம் ஆண்டுக்கு ரூ.2800 கோடியை இழந்து வருகிறது.

7 /8

தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளில் பெரும்பாலானவை கிராமங்களில் இருப்பதாக அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கக் குழு C கூறுகிறது. கிராமவாசிகள் குறைந்தபட்சம் 500 ரூபாய் இருப்பு வைத்திருப்பது எளிதல்ல. குறைந்தபட்சம் 500 ரூபாய் இருப்பு வைக்கும்படி கேட்டால், அவர்கள் கணக்கை மூடலாம். குறைந்தபட்ச இருப்பு குறைக்கப்படும்போது அபராதம் விதிக்கப்படும்.

8 /8

தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), 5 ஆண்டு அஞ்சல் அலுவலக வைப்புத் திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), சுகன்யா சமிர்தி யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை மிகவும் பிரபலமான சிறிய அளவிலான சேமிப்புத் திட்டங்கள் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இந்த திட்டங்களுக்கான வட்டி தொகை வரி விலக்கு.