Benefits of Green Tomato: தக்காளி நமது சமையலறையின் முக்கிய அங்கமாக உள்ளது. இது ஒரு வகையான காயாகும். சாம்பார், ரசம், சூப், என பல விதங்களில் இது சமையலில் உதவுகிறது.
சந்தையில் அனைத்து கடைகளிலும் சிவப்பு தக்காளி அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால் பச்சை தக்காளியும் நம் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். பச்சை தக்காளி உங்கள் உணவுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், அதை சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பச்சை தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகிறது. பச்சை தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பச்சை தக்காளி வைட்டமின் சி இன் நல்ல மூலமாகும். இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பச்சை தக்காளியில் அதிக அளவு ஃபோலிக் அமிலம் உள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. கர்ப்ப காலத்தில் குழந்தையின் உருவாக்கத்திற்கு இது அவசியம். நரம்பியல் வளர்ச்சியை இது ஊக்குவிக்கிறது.
லைகோபீனின் ஆதாரம்: பச்சை தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது அதன் சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இது ஒரு இயற்கை நிறமியாகக் கருதப்படும் கரோட்டினாய்டு வகை.
எலும்புகளை வலுவாக வைத்திருக்கும்: உங்கள் எலும்புகள் பலவீனமாக இருந்தால், உங்களுக்கு தொடர்ந்து உடல் வலி இருந்தால், நீங்கள் பச்சை தக்காளியை உட்கொள்ள வேண்டும். பச்சை தக்காளியில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இவை எலும்புகளை பலப்படுத்தி அவற்றின் அடர்த்தியை அதிகரிக்கின்றன.
பச்சை தக்காளியை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். பச்சை தக்காளியில் சோடியத்தின் அளவு குறைவாகவும், பொட்டாசியத்தின் அளவு அதிகமாகவும் உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
பச்சை தக்காளி சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பச்சை தக்காளியில் உள்ள வைட்டமின்-சி சருமத்தை நீண்ட காலத்திற்கு இளமையாக வைத்திருக்கும்.