Ayushman Bharat scheme ; மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Ayushman Bharat scheme Latest News : மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை 2024 தொடங்கியுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு வழங்குவதற்காக, மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்கும். இதனால் வயதானவர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை நிதி சிக்கல்களைப் பற்றி கவலைப்படாமல் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்குவதன் முக்கிய நோக்கம், இந்தியாவின் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆயுள் காப்பீடு வழங்குவதாகும். மத்திய அரசின் தகவல்களின்படி, இந்தியாவில் உள்ள 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து மூத்த குடிமக்களும் இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் மருந்துகள், பரிசோதனைகள், மருத்துவமனை கட்டணம் மற்றும் பல செலவுகளை செலுத்த முடியும்.
விண்ணப்பதாரர் இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். இந்திய குடிமகன் 70 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னவென்றால், ஆதார் அட்டை, இமெயில், மொபைல் எண், மின் கட்டணம் எண், முகவரி ஆதாரம், பான் கார்டு
ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்கலாம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வெப்சைட்டு செல்ல வேண்டும். அங்கு மூத்த குடிமக்களுக்காக கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் நிரப்புங்கள். அதன்பிறகு மூத்த குடிமக்களுக்கான அட்டையையும் ஆன்லைனிலேயே டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்காக பதிவு செய்த பிறகு, மீண்டும் லாகின் செய்தால் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். உங்கள் டெஸ்க்டாப் திரையில் ஒரு டாஷ்போர்டு தோன்றும், மூத்த குடிமக்கள் தங்கள் அட்டையை பதிவிறக்கம் செய்ய டவுன்லோடு லிங்க் காட்டும். அதனை கிளிக் செய்தால் டவுன்லோடு ஆகும்.