இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்: முழு பட்டியல் இதோ

Benefits of Ginger: இஞ்சியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை உட்கொள்வதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது.

Benefits of Ginger: ஆயுர்வேதத்தில் இஞ்சி ஒரு நல்ல மருந்தாக கருதப்படுகின்றது. நாம் நமது சமையலில் பயன்படுத்தும் இஞ்சி உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற பல வித ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள இஞ்சி குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பல வழிகளில் அதிகப்படுத்துகின்றது. இஞ்சி உட்கொள்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் பல வித ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

இஞ்சியை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. இதை உட்கொள்வதால், நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் அதிகரிக்கின்றது. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் இஞ்சியில் உள்ளன. 

2 /9

அஜீரணம், குமட்டல் போன்ற சங்கடங்கள் ஏற்பட்டால் இஞ்சியை உட்கொள்வது பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும். வாயுத்தொல்லையை சீராக்கவும் இது உதவுகின்றது. 

3 /9

உடல் எடையை குறைக்கவும் இது நல்ல வீட்டு வைத்தியமாக உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். இதனால் தொப்பை கொழுப்பையும், உடல் எடையை குறைக்கலாம். இதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிப்பது அதிக பலன்களை அளிக்கும். 

4 /9

இஞ்சி டீ சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கின்றது. இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரையும் குடிக்கலாம். குறிப்பாக, மழை காலங்களில், பருவ மாற்றத்தால் ஏற்படும் சளி, இருமலுக்கு இது மிகவும் உதவும்.

5 /9

உடலில் ஏற்படும் வலிகளை குறைப்பதில் இஞ்சி உதவுகிறது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியில் இஞ்சி பெரிய அளவில் நிவாரணம் அளிக்கின்றது. ஒரு ஆய்வில், 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இஞ்சி வலியைக் குறைப்பதாக உணர்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இஞ்சி ஒரு மருந்தாக உதவுகின்றது.

6 /9

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் இஞ்சியை குறைவாக சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சில மருத்துவ குணங்களின் தொடர்பு காரணத்தால், அதிகமாக இஞ்சியை உட்கொள்வது இந்த மருந்துகளின் செயல்திறனைக் குறைத்து, பாதகமான பலன்களை ஏற்படுத்தக்கூடும்.

7 /9

கர்ப்பிணிப் பெண்கள் இஞ்சி சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். இதனால் கருச்சிதைவு அபாயம் அதிகரிக்கலாம் என சில நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக இதை கண்டிப்பாக அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. 

8 /9

ஒவ்வாமை: பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதை அதிகமாக உட்கொள்வது சொறி, அரிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினைகள் உள்ளவர்கள், இதை அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்ப்பது நல்லது.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.