ஓவர் எடையை உடனே குறைக்க இரவில் இதை செய்தால் போதும்: குட் நைட் டிப்ஸ்!!

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இரவில் இதை செய்தால் சில நாட்களில் வித்தியாசத்தை காணலாம்.

Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால் நாம் உடல் ரீதியாக பல வித பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். சில எளிய, இயற்கையான வழிகளில் நம் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்கலாம். அப்படி சில எளிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம். காணலாம்.

1 /11

மக்கள் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். இரவு நேரங்களில் சில அரோக்கியமான பழக்கங்களை பின்பற்றி, உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /11

இரவில் காஃபி, டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக கிரீன் டீ, இஞ்சி தண்ணீர், இலவங்கப்பட்டை நீர், சீரக நீர் போன்ற மூலிகை தண்ணீர் வகைகளை குடிக்கலாம், இவை செரிமானத்தை சீராக்கி, கலோரிகளை வேகமாக குறைக்க உதவும். இவற்றால் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

3 /11

எடை இழப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இரவு உணவு மிக முக்கியமான ஒன்றாகும். லேசான இரவு உணவை உட்கொள்ள வேண்டும். இரவில் சேசான, சமச்சீரான உணவை  உட்கொள்வது நல்லது. இந்த உணவு எளிதாக ஜூரணிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். இரவில் நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் ஆகாமல் இருப்பதும் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 

4 /11

உறங்கும் முன் அதிக அளவில் உணவை உட்கொள்ளக்கூடாது. இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமின்றி, இதனால் உடல் உப்பசம், வீக்கம், வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகளும் ஏற்படலாம். மெலிந்த புரதங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவை அடங்கிய சமச்சீர் உணவை இரவில் சரியான அளவில் உட்கொள்வது நல்லது. 

5 /11

அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை இரவு நேரங்களில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவை இரவில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதனால் தூக்கம் கெடும். இதன் காரணமாக இரவில் பசி எடுத்து, அதிகம் சாப்பிடுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். 

6 /11

இரவு உணவுக்கும் தூங்குவதற்கும் இடையில் குறைந்தது 2 மணி நேர இடைவெளியாவது கொடுக்க வேண்டும். இது இரவு உணவு செரிமானம் ஆவதற்கான போதுமான அவகாசத்தை அளிக்கின்றது. இரவு உணவு உட்கொண்டு உடனே உறங்கினால், உணவு செரிக்கப்படாமல், கலோரிகள் அதிகமாவதோடு, உடல் எடையும் வேகமாக அதிகரிக்கின்றது.

7 /11

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது நல்லதல்ல. இது எடை இழப்புக்காக எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தையும் சீர்குலைப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

8 /11

நடைப்பயிற்சி: இரவு உணவிற்கு பிறகு நடப்பது நல்லது. இது நாள் முழுதும் நம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை எரிக்கவும் நல்ல உறக்கத்திற்கும் உதவுகிறது. இரவு நேர நடைப்பயிற்சி கூடுதல் கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

9 /11

இரவில் குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூங்குவது மிக அவசியம். போதுமான தூக்கம் ஆரோக்கியமான வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக உள்ளது. சரியாக உறங்காதவர்கள் உடல் பருமனுக்கு ஆளாவதாக ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. போதுமான அளவு தடை இல்லாத உறக்கம் எடை இழப்புக்கு அவசியமாகும். 

10 /11

இந்த இரவு நேர பழக்கங்களுடன் நாள் முழுதும் சமச்சீரான உணவு, போதுமான உடல் செயல்பாடுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையும் உடல் எடையை குறைக்க மிக அவசியமானவை. இவை அனைத்தையும் சேர்த்து ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைத்தால், உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல் இருக்கும்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.