Calorie Deficit Diet: கலோரி பற்றாக்குறை உணவு, உடல் எடையை மிக வேகமாக குறைக்க உதவுவதோடு, ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
கலோரி என்பது நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களிலிருந்து பெறப்படும் ஆற்றல் அலகு ஆகும், இது பல்வேறு உடல் செயல்பாடுகளைச் செய்ய ஒருவர் பயன்படுத்தும் ஆற்றலின் அளவையும் குறிக்கிறது. ஒரு உணவுப் பொருளை உண்ணும்போது, அதிலுள்ள கலோரிகள் உடலுக்கு செலவதால், உடல் இயகக்த்திற்கு தேவையான ஆற்றலைப் பெறலாம்.
கலோரி பற்றாக்குறை உணவு என்றால் என்ன? நமது உடல் தனது அன்றாட நடவடிக்கைகளைச் செய்யும்போது, ஒவ்வொரு முறையும் சில கலோரிகளை எரிக்கிறது. கலோரி பற்றாக்குறை என்பது அதிக அளவு கலோரிகளை எரிப்பதும், குறைந்த அளவு கலோரிகளை உட்கொள்வதும் ஆகும்.
உடல் எடையை குறைப்பதற்கான மிகவும் நன்கு அறியப்பட்ட முக்கியமான செயல்முறை, கலோரி பற்றாக்குறை உணவு. உதாரணமாக, ஒருவர் 1500 கலோரிகளை உட்கொண்டு 2000 கலோரிகளை எரித்தால், அவரு 500 கலோரி பற்றாக்குறை இருக்கும். இந்த பற்றாக்குறை கலோரி, உடலில் இருந்து எடுத்துக் கொள்ளும்
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், நமது தற்போதைய உணவை முற்றிலும் மாற்ற பரிந்துரைக்கின்றனர். கலோரி பற்றாக்குறை உணவின் முக்கிய கூறுகளில் ஒன்று நாள் முழுவதும் நாம் உட்கொள்ளும் உணவுகளின் அளவை குறைக்காமல், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து அதிகமாகவும் குறைந்த கலோரி உள்ளடக்கம் நிறைந்த உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
உடற்பயிற்சி செய்யுங்கள் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி முதல் படியாகும். நடைபயிற்சி, ஓட்டம், ஜாகிங், ஸ்கிப்பிங் என எளிய உடற்பயிற்சிகளுடன் உடல் எடை குறைப்பு முயற்சியை தொடங்கலாம். நீங்கள் ஏற்கனவே இந்த முயற்சியில் இருப்பவராக இருந்து, அதிக உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் வழக்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
க்ராஷ் டயட் செய்யாதீர்கள் நீங்கள் கலோரி பற்றாக்குறை உணவைப் பின்பற்ற முயற்சிக்கும்போது, கிராஷ் டயட்டைப் பின்பற்ற வேண்டாம். போதுமான அளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் கலோரிகளை குறைத்து உண்ணவும்
சாப்பிடாமல் இருப்பதற்குப் பதிலாக அல்லது உணவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, நீங்கள் சிறிய பகுதிகளாக சாப்பிட்டு, உங்கள் உணவுக்கு இடையில் ஒரு குறுகிய இடைவெளியை வைத்திருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெற்றிகரமான எடை இழப்பு பயணத்தை உறுதி செய்வதற்கு தண்ணீர் மட்டுமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பலருக்குத் தெரியாது
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை