Symptoms Of High Cholesterol: நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, சில அறிகுறிகள் தோன்றத் தொடங்கும. இந்த அறிகுறிகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
இதயம் உடல் முழுவதும் தூய இரத்தத்தை பம்ப் செய்யும் உடலின் முக்கிய உறுப்பாகும். மேலும் தமனிகள் வழியாக இரத்தம் இதயத்தை அடைகிறது. ஆனால் அப்படிப்பட்ட தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர ஆரம்பித்தால் பலவித பிரச்சைகளை சந்திக்க நேரிடலாம். கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு, இது உடலில்அதிகரிக்கத் தொடங்கினால் பல ஹார்மோன்கள் மற்றும் செல் சவ்வுகள் உருவாகக் கூடும். அத்தகைய சூழ்நிலையில் நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் தாக்குதல் சில அறிகுறிகளின் அடிப்படையில்தான் ஏற்படத் தொடங்கும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.
கொலஸ்ட்ரால் அறிகுறிகள்: நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகை கொலஸ்ட்ரால் உள்ளது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, சில அறிகுறிகள் தோன்ற தொடங்கும். இந்த அறிகுறிகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
எடை கூடுதல்: உங்கள் எடை தீடிரென்று அதிகரித்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இது கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகவும்.
கால்களில் வலி: எந்த காரணமும் இல்லாமல் அடிகடி உங்களுக்கு கால்களில் வலி இருந்துக்கொண்டே இருந்தால், இதுவும் அதிக மட்டும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.
கண்களைச் சுற்றி மஞ்சள் புள்ளிகள்: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கண்களைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் உருவாகத் தொடங்கலாம். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இந்தப் புள்ளிகள் மூக்கில் வந்து சேரும். இது Xantheplasma palpebrarum (XP) என்று அழைக்கப்படுகிறது.
சோர்வாக உணரல்: நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால், அது கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
கை கால்களில் உணர்வின்மை: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கத தொடங்கினால், கை மற்றும் கால்களில் இரத்த ஓட்டம் குறையத் தொடங்கும், இதனால் கை மற்றும் கால்களில் வீக்கம் மற்றும் உணர்வின்மை ஆகியவை வரத் தொடங்கும்.
மூச்சுத்திணறல்: கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் நமது நுரையீரலை பாதிக்கலாம், இதன் காரணமாக நாம் சுவாசிப்பதில் சிரமத்தைசந்திக்கலாம்.
தோலில் தடிப்புகள் தோன்றலாம்: கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இரத்தக் குழாய்களில் ஒருவிதமான ஒட்டும் திரவம் போல் சேரலாம், இதனால் தோலில் தடிப்புகள் ஏற்படலாம். இந்த தடிப்புகள் உடலின் பல பாகங்களில் தெரியும். இதன் காரணமாக, உங்கள் கண்களின் கீழ், பின்புறம், கால்கள் மற்றும் உள்ளங்கைகளில் வீக்கம் தோன்றும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.