தெற்கு ஜார்ஜியாவில் வைர வடிவிலான 240 மீட்டர் கண்ணாடி பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
ஜார்ஜியாவின் Dashbashi Canyon இல் கட்டப்பட்ட 240 மீட்டர் கண்ணாடி பாலம் பார்வையாளர்களுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது. தெற்கு ஜார்ஜியாவில் தலைநகர் திபிலிசியில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தொலைவில் டாஷ்பாஷி கனியன் பாலம் அமைந்துள்ளது.
(Photograph:AFP)
இஸ்ரேல் மற்றும் ஜார்ஜியாவில் செயல்படும் காஸ் குழுமத்தின் $40.8 மில்லியன் முதலீட்டில் இந்தப் பாலம் கட்டப்பட்டது. கண்ணாடி அமைப்பு 280 மீட்டர் (தோராயமாக 919 அடி) உயரத்தில் அமைந்துளது. இங்கிருந்து பார்க்கும்போது நீர்வீழ்ச்சிகள் மற்றும் குகைகள் என இயற்கையின் அனைத்து வடிவங்களையும் கண்டு ரசிக்கலாம். (Photograph:AFP)
இந்த கண்ணாடிப் பாலம், எஃகு மற்றும் கண்ணாடியால் ஆனது, இந்த கட்டமைப்பை உருவாக்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனது. பாலத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா ஜூன் 14 அன்று நடைபெற்றது, இதில் ஜார்ஜிய பிரதமர் இராக்லி கரிபாஷ்விலி கலந்து கொண்டார். (Photograph:AFP)
பாலத்தின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள "வைர வடிவ" பல நிலை கஃபே, கட்டமைப்பின் முக்கியமான ஈர்ப்புசக்தியாக அமைந்திருக்கிறது. (Photograph:AFP)
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த பாலம் இடம்பெறும் வாய்ப்பு உண்டு. உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான தொங்கும் கட்டமைப்புகளில் ஒன்றாகும், (Photograph:AFP)
இப்பகுதியில் ஜிப் லைன் உள்ளது, அங்கு பார்வையாளர்கள் பள்ளத்தாக்கு முழுவதும் பைக்கில் சவாரி செய்யலாம் (Photograph:AFP)