Dinesh Karthik | நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் ஏமாற்றமளிப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Dinesh Karthik, Virat Kholi | நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியதற்கு ரோகித், விராட் கோலியின் பேட்டிங் முக்கிய காரணம் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
இப்போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி இருக்கிறது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய அணியின் டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ரோகித் சர்மா எதிர்பார்த்தளவுக்கு ஆடவில்லை என கூறியுள்ளார்.
அவர்கள் இருவரின் பேட்டிங்கே இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணம். விராட், ரோகித் இருவரும் நல்ல பார்மில் இல்லை. விராட் கோலிக்கு இது ஒரு கடினமான காலம் என்று நினைக்கிறேன். அவருடைய திறமை பற்றி எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் நியூசிலாந்து தொடரில் விராட் பேட்டிங் ஏமாற்றமளித்தது.
அவர் எந்தநேரத்திலும் கம்பேக் கொடுக்க முடியும். விராட் கோலியும் அதற்காக இப்போது தீவிர உழைத்துக் கொண்டிருப்பார். அவர் கேள்விகளை உருவாக்கும் நபர் நல்ல. கேள்களுக்கு பதிலை கொடுக்கக்கூடிய ஒரு பிளேயர் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
என்னால் என்ன நம்ப முடியவில்லை என்றால் விராட் கோலி இடது கை சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சானட்டருக்கு இரண்டு முறை அவுட்டாகியிருக்கிறார். இப்படியெல்லாம் அவர் விக்கெட்டை பறிகொடுத்து பார்த்ததே இல்லை. அதுவும் சுழற்பந்துவீச்சாளரை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடிய ஒரு பிளேயர் விராட்.
அவரே இப்படி அவுட்டாகிறார் என்றால் விராட் கோலி நிச்சயம் பார்மில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவது குறித்து விராட் மற்றும் ரோகித் சர்மா பரிசீலிக்க வேண்டும் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.