அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஐடிஆர் ரீஃபண்ட் தொடர்பான 5 வருமான வரி விதிகள்

ITR refund Rules: FY 2022-23 ஐடிஆர் தாக்கல் செய்துவிட்டு, வருமான வரித் திரும்பப் பெற காத்துக் கொண்டிப்பவர்களில் நீங்களும் ஒருவரா? 

வருமான வரி பிடித்தம் மற்றும் அதிகமாக வரி கட்டியதால், அவற்றை திரும்பப் பெறத் தகுதியுடையவரா நீங்கள்? இந்த முக்கியமான புள்ளிகளைச் சரிபார்க்கவும்

1 /7

வருமான வரி ரீஃபண்ட் பணம் 2022-2023 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2023-24) வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31ஆக இருந்தது. ஐடிஆர் ஐத் தாக்கல் செய்தவர்கள் மற்றும் ஐடிஆர் பணத்தைத் திரும்பப் பெற தகுதியுடையவர்கள், அது தொடர்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

2 /7

வருமான வரி திரும்பப் பெற யார் தகுதியானவர்? நிலுவைத் தேதிக்குள் அல்லது அதற்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்யும் அனைத்து வரி செலுத்தும் தனிநபர்களும் ஐடிஆர் பணத்தைத் திரும்பப் பெறலாம்

3 /7

வருமான வரி + வட்டி  வருமான வரித் துறையானது, மதிப்பீட்டு ஆண்டின் ஏப்ரல் 1 முதல் வரித் திரும்பப்பெறுதலுக்கான வட்டியை கணக்கிடத் தொடங்கும். இருப்பினும், உங்கள் வருமான வரிக் கணக்கை சரியான நேரத்தில் தாக்கல் செய்திருந்தால் மட்டுமே பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான சூத்திரம் செயல்படும். எனவே, நடப்பு நிதியாண்டில் (FY 2022-23), கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அதாவது ஜூலை 31, 2023க்குள் ITR தாக்கல் செய்திருந்தால், உங்களுக்கு ஏப்ரல் 1, 2022 முதல் வட்டி கிடைக்கும்.

4 /7

வருமான வரி ரீஃபண்ட் மீதான வட்டி விகிதம் வரி செலுத்துவோர் ஐடிஆர் ரீஃபண்ட் தொகையில் 0.50 சதவீதம் மாதாந்திர வட்டி பெறுவார்கள்.

5 /7

வருமான வரி ரீஃபண்ட் வரி விதிப்பு ITR ரீஃபண்ட் தொகைக்கு வரி இல்லை.  

6 /7

வருமான வரி திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி கணக்கீடு எப்படி இருக்கும் தெரியுமா?  

7 /7

ITR ரீஃபண்ட் மீதான வட்டி விகிதம் 234D பிரிவின் கீழ் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, 2 மாதங்கள் 17 நாட்களுக்கு வட்டியை ரூ.1005க்கு கணக்கிட வேண்டும். பிரிவு 234D இன் படி, வட்டி 1000 ரூபாயில் கணக்கிடப்படும்