Good Fat vs Bad Fat : கொழுப்புச்சத்து குறித்து உங்களுக்கு பல சந்தேங்கள் இருந்தால் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இடையே உள்ள வித்தியாசம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Good Fat vs Bad Fat News tamil : எந்த வகையான கொழுப்பு உடலுக்கு நல்லது, எவையெல்லாம் கெட்ட கொழுப்பு என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால், தேவையற்ற பயத்தை தவிர்க்கலாம்.
பொதுவாக கொழுப்புச்சத்து குறித்து தவறான எண்ணம் இருக்கிறது. கொழுப்பு சத்து உடலுக்கு தேவையில்லை என நினைக்கிறார்கள். உண்மையில் உடலுக்கு கொழுப்புச்சத்து தேவை. நாம் சாப்பிடும் உணவிலேயே கொழுப்புச் சத்தும் அடங்கியிருக்கிறது. உடலுக்கு தேவையான கொழுப்பை கல்லீரலே உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும்.
ஆனால், கொழுப்புச் சத்து அதிகரிக்கும்போது தான் ஆபத்து அதிகரிக்கிறது. நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டு வகைகளாக மருத்துவர்கள் பிரிக்கிறார்கள். எவையெல்லாம் நல்ல கொழுப்பு, எவையெல்லாம் கெட்ட கெழுப்பு என தெரிந்து கொள்வது அவசியம். இரண்டு கொழுப்புக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்.
நல்ல கொழுப்பு கலோரிகளை எரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. நம் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. இந்த கொழுப்பு குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம், குறிப்பாக அவர்களின் கழுத்து மற்றும் தோள்களில் உள்ளது. பிரவுன் கொழுப்பு என்றும் இதனை அழைப்பார்கள்.
வெள்ளை கொழுப்பு, 'கெட்ட கொழுப்பு' என்றும் அழைக்கப்படுகிறது, இது வயிறு, தொடைகள், இடுப்பு மற்றும் கைகள் போன்ற இடங்களில் குவியும். ஆற்றல் மூலம் என சொல்வார்கள். இது ஆற்றலுக்கு முக்கியமானது என்றாலும், அதிகப்படியான வெள்ளை சர்க்கரையை உட்கொள்ளும்போது இதன் அளவு அதிகரிக்கும். அதனால், தீவிர வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பெரும்பாலான மக்கள் அறியாத ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், பழுப்பு கொழுப்பு வெள்ளை கொழுப்பை எரிக்கும். பழுப்பு கொழுப்பு கலோரிகளை எரிப்பதன் மூலம் வெப்பத்தை உருவாக்குகிறது, அதாவது சுறுசுறுப்பாக இருக்கும்போது, வெள்ளை கொழுப்பு செல்களில் சேமிக்கப்படும் ஆற்றலை உடல் பயன்படுத்த உதவுகிறது.
அதிக சுறுசுறுப்பாக பழுப்பு கொழுப்பு இருக்கும். இது உடல் அதிக கலோரிகளை எரிக்கிறது. இதன் விளைவாக வெள்ளை கொழுப்பு குறைகிறது. பழுப்பு கொழுப்பை செயல்படுத்துவது வெள்ளை கொழுப்பை எரிக்கவும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் ஒரு சூப்பரான வழியாகும்.
பொதுவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை அடைய முடியும். அதாவது தினசரி உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு இருந்தால் வெள்ளை கொழுப்பு அதிகம் உடலில் சேராது.
உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாலையோர கடைகள் மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை அதிகம் சாப்பிடும்போது கெட்ட கொழுப்பு உடலில் அதிகரிக்க செய்யும். நாளடைவில் இவை நரம்புகளில் படிந்து அவற்றின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்த தொடங்கும்.
இதய பகுதிகளில் இந்த கெட்ட கொழுப்புகள் படிந்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பிரச்சனைகள் வரும். கொழுப்பு அளவு குறித்து மருத்துவரை சநித்து ஆலசோனை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும், கொழுப்பு பரிசோனை செய்து கொள்வதும் அவசியம்.