Good Health and Black Pepper: குருமிளகு உடலுக்கு நன்மைகளை செய்வதோடு, தீமைகளை விரட்டியடிக்கும்
ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும் மிளகில் பல நன்மைகள் உள்ளன... அவற்றில் சில...
மேலும் படிக்க | ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள்
கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு மிகவும் அவசியம். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்களுக்கு குருமிளகு ஒரு வரப்பிரசாதம்.
தினமும் உங்கள் உணவில் சிறிது கருப்பு மிளகு உட்கொள்வது கொழுப்பை எரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதாவும் உதவுகிறது.
மிளகு மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் பண்பு குருமிளகுக்கு உண்டு
நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை இருந்தால், குருமிளகை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். சருமத்தில் ஈரத்தன்மையையும் இது பராமரிக்கும்
குருமிளகை சூடான பாலில் கலந்து சாப்பிட்டால் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர அடிக்கடி சளி பிடித்தால் தினமும் மிளகு சாப்பிட்டு வந்தால் நிரந்தர நிவாரணம் கிடைக்கும். குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.