Ration card | ரேஷன் கார்டு அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான குட்நியூஸ் தெரிவித்திருக்கிறது. அது என்ன?
Ration card Good News | ரேஷன் கார்டு அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் விரும்பினால் கோதுமை கூட வாங்கிக் கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. அரசு கூறியிருக்கும் விளக்கம் இதுதான்
தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் மாதந்தோறும் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration card) இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி வருகிறது. அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் அரிசி கிடைக்கும். சர்க்கரை அட்டை உள்ளிட்ட பிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி கிடைக்காது.
ஒரு அரிசி அட்டைக்கு அதிகபட்சம் 20 கிலோ வரை அரிசி கொடுக்கப்படுகிறது. இதில் ஒரு கூடுதல் விருப்பத்தை தமிழ்நாடு அரசு சேர்த்திருக்கிறது. அது என்னவென்றால், அரிசி அட்டைதாரர்கள் மட்டும் விரும்பினால் அரிசியை குறைவாக வாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக கோதுமை வாங்கிக் கொள்ளலாம்.
இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை கொடுத்துள்ள விளக்கத்தில், அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ விதமும். ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமை விலையில்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இதுதவிர கடந்த ஆண்டு இந்த துறை மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதாந்திர பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்கள் நடத்தப்பட்டு நகல் அட்டை புதிய குடும்ப அட்டை. முகவரி மாற்றம். பெயர் சேர்த்தல். உள்ளிட்ட 1 இலட்சத்து 83 ஆயிரத்து 610 கோரிக்கைகள் பெறப்பட்டு அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிவாரணத் தொகையாக ரூ.4,000/- வீதம் 2 கோடியே 8 இலட்சத்து 14 ஆயிரத்து 528 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நியாய விலைக் கடைகளின் மூலம் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு 2 கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரத்து 726 அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
அத்தியாவசியப் பொருள்களைத் தகுதியான பயனாளிகளுக்கு அளிக்கும் பொருட்டு கைவிரல் ரேகை பதிவு முறை ஏற்படுத்தப்பட்டு. ஆதார் எண்கள் குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைப்படி, ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய ருடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1.666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.
31.12.2023 வரை நியாய விலைக் கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான பணிகள் 2.778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு சர்வதேசச் சிறுதானிய ஆண்டாக ஐநா.சபையினால் அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறுதானிய உணவுத் திருவிழா நிகழ்ச்சிகள் ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு மக்களிடையே சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.