Health Benefits Of Garlic : பூண்டு உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் உணவு பொருட்களுள் ஒன்றாக இருக்கிறது. இதை, தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் ஏற்படும்? இங்கு பார்ப்போம்!
Health Benefits Of Garlic : இந்திய சமையலறையில், பல நன்மைகளை கொடுக்கும் பல பொருட்கள் உள்ளன. இதில், பூண்டு பல மருத்துவ நன்மைகள் கொண்ட உணவு பொருளாக இருக்கிறது. இதன் தனித்துவமான சுவை, ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. இதை, தினமும் ஒன்று சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்.
இந்திய சமையலறைகளுள், மிகவும் முக்கியமான உணவு பொருளாக இருப்பது பூண்டு. இதை காரமான அசைவ உணவுகளில் இருந்து, சாதாரண சாம்பார் வரை அனைத்து உணவுகளிலும் பூண்டு உபயோகிக்கப்படுகிறது.
பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இதனை சமையலில் மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. டீயாகவும் குடிக்கலாம்.
பூண்டில் இருக்கும் அற்புதமான நன்மைகளை வரிசையாக பார்க்கலாம்!
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: பூண்டில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இதில் வைட்டமின்கள் சி மற்றும் பி6, மாங்கனீஸ் மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. சளி மற்றும் காய்ச்சலை குறைக்க இதனை தினமும் ஒரு பல் சாப்பிடலாம்.
டீடாக்ஸ்: பூண்டு, உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றி உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது.
கொழுப்பு: பச்சை பூண்டை, வெறும் வயிற்றில் ஒன்று சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு என்று சொல்லப்படும் LDL கொழுப்பு குறையும். அதே போல நல்ல கொழுப்பு எனப்படும் HDL கொழுப்பை அதிகரைக்க உதவும்.
ரத்த அழுத்தம்: ஹைபர் டென்சன் உள்ளிட்ட பிரச்சனைகளை குறைக்க பூண்டை சேர்த்து கொள்ளலாம். இதனால், உடலில் ரத்த அழுத்தம் குறையும். இது, உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்ல உதவும்.
பூண்டு, பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து மீள உதவுகிறது. ஏற்கனவே உடலில் தாக்கிய நோய் பாதிப்புகளையும் இது குறைக்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)