Health Benefits of Garlic: நமது இந்திய உணவுகளில் பூண்டிற்கு முக்கிய பங்குள்ளது. சமையலில் பயன்படுத்தப்படும் சில இன்றியமையாத பொருட்களில் பூண்டும் ஒன்றாக உள்ளது.
Health Benefits of Garlic: பூண்டு உணவுக்கு கூடுதல் சுவையையும் நறுமணத்தையும் சேர்ப்பதோடு, பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பூண்டில் பூஞ்சை, காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கார்போஹைட்ரேட், தாமிரம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், உணவு நார்ச்சத்து, புரதச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி, பி6, கால்சியம், செலினியம் ஆகியவையும் இதில் நிறைந்துள்ளன. பூண்டின் பல வித ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பூண்டில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. இரத்தக் கட்டிகள் உருவாவதையும் பூண்டு தடுக்கிறது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு பூண்டு பயனுள்ளதாக இருக்கும். பூண்டு சாப்பிடுவதால் ஆஸ்துமா அடாக் கட்டுப்படுத்தப்படுகின்றது. தினமும் ஒரு கிளாஸ் பாலுடப் மூன்று பூண்டு பற்களை உட்கொண்டால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிவாரணம் காணலாம்.
பூண்டு சாப்பிடுவது செரிமானத்தையும் பலப்படுத்துகிறது. இதனால் செரிமானம் சீராகி, உப்பசம், வாயுத்தொல்லை ஆகியவற்றில் நிவாரணம் கிடைகின்றது. இதில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இரைப்பை குடல் நோய்த்தொற்றுகளைக் குறைக்கின்றன.
பூண்டில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் தொற்றுகளிலிருந்து பூண்டு நம்மை காக்கிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கின்றது.
பூண்டை பச்சையாக சாப்பிடுவதால், வயிற்றில் உள்ள புழுக்கள் சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேறும். பூண்டில் உள்ள பண்புகள் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பாதுகாக்கிறது.
பூண்டில் உள்ள வைட்டமின் சி, குர்செடின், மாங்கனீஸ் மற்றும் செலினியம் ஆகியவை கண்களில் ஏற்படும் அழற்சியை அகற்றி கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன. கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பூண்டு நல்லது.
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் பூண்டை சாப்பிடலாம். இது எல்.டி.எல் அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இதில் உள்ள பண்புகள் உடலில் சேரும் அதிக கொலஸ்ட்ராலை அகற்றி இதய பாதுகாப்பையும் உறுதிபடுத்துகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.