உடல் பருமனை குறைக்க நாம் உண்ணும் உணவுகளும் அருந்தும் பானங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக சாப்பிட்ட பின் அருந்தும் சில பானங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதாக இருந்தால், கொழுப்பை எளிதாக கரைக்கலாம்.
நம்மில் பலருக்கு சாப்பிட்ட பின் சோடா பானங்கள், செயற்கை பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும். அதில இருப்பதெல்லாம் சர்க்கரை மற்றும் கலோரி மட்டுமே. எனவே, அதனை தவிர்த்து, செரிமானத்தை மேம்படுத்தும் பானங்களை உட்கொள்வதினால், உடல் பருமன் குறையும்.
உணவிற்கு பின் செரிமானத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை தூண்டும் பானங்களை உட்கொள்வதினால், உடலில் சேரும் கொழுப்பும் தொப்பையும் வெண்ணெய் போல் கரையும். இதற்கு காலை உணவு முதல் இரவு உணவு வரை இந்த பானங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அந்த பானங்கள் என்ன என்பதையும், அவற்றை சுலபமாக தயாரிக்கும் வழியையும் தெரிந்து கொள்வோம்.
இஞ்சி நீர்: இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற சேர்மம் அதிகம் காணப்படுகிறது. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். எனவே, உணவுக்கு பின் இஞ்சி நீர் குடிக்க வேண்டும். இதை தயாரிக்க, ஒரு சிறிய துண்டு இஞ்சியை நன்றாக துருவி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். அதற்கு சுவையை சேர்க்க சிறிது தேன் அல்லது எலுமிச்சை சேர்க்கவும்.
புதினா நீர்: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்ட புதினா, செரிமான செயல்முறையை சீராக்கி. வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதோடு, வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. புதினா தேநீர் அல்லது தண்ணீரை உட்கொள்வது வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது பிரச்சனைகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
எலுமிச்சை நீர்: வைட்டமின் சி அதிகளவில் உள்ள எலுமிச்சை நீர் கொழுப்பைக் கரைப்பதுடன் முகத்திற்கு பொலிவையும் தருகிறது. உணவுக்குப் பிறகு இதனை குடிப்பது வயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதனுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தேன் சேர்ப்பதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
துளசி நீர்: துளசியின் ஒவ்வொரு இலையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக காணப்படுகின்றன. துளசி நீர் அல்லது தேநீர் தயாரிப்பதும் மிகவும் எளிது. துளசி இலைகளை நன்றாக கிள்ளி தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதில் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இது உடல் எடையை குறைக்க உதவும்.
கிரீன் டீ: மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு கிரீன் டீயை உட்கொள்ளுங்கள். இதில் உள்ள கேடசின் என்ற கலவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உணவை ஜீரணிக்க உதவுவதோடு, உடல் பருமனை எளிதில் குறைக்கிறது. செய்வதும் மிக எளிது.
சீரக நீர்: சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீர், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை. சாப்பிட்ட பின் இதனை அருந்துவது, வளர்சிதை மாற்றத்தை துரிதபடுத்தி, அதிக கலோரிகளை எரித்து, உடலுக்கு ஆற்றலை கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.