Home Workouts For Fat Burn : ஒரு சிலர், உடலில் விடாப்பிடியாக இருக்கும் கொழுப்பை விரைவில் கரைக்க வேண்டும் என்று யோசிப்பர். அவர்கள் காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
Home Workouts For Fat Burn : உலகளவில் மக்கள் பலர், உடல் பருமனால் பாதிக்கப்படுவதாக ஒரு தரவு தெரிவிக்கிறது. இதில் இருந்து தப்பிப்பதற்காக பலர் டயட் இருந்தும் அது பயணளிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு சில உடற்பயிற்சிகளை நாம் காலையில் எழுந்து செய்தால் அதனால் நாம் நமது உடலில் இருக்கும் கொழுப்பை வேகமாக குறைக்கலாம் என கூறுகின்றனர் மருத்துவ அறிஞர்கள். அந்த உடற்பயிற்சிகளின் லிஸ்டை இங்கு பார்க்கலாமா?
Walking : தினசரி வாக்கிங் செய்வது, உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், உடலில் உள்ள விடாப்பிடியான கொழுப்பை கரைப்பதற்கும் இந்த உடற்பயிற்சி உதவுகிறது. தினமும் 10 முதல் 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றன.
Squats: உடலில் உள்ள கொழுப்பை குறைக்க, ஸ்குவாட் உடற்பயிற்சி மிகவும் உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த உடற்பயிற்சியை காலையில் எழுந்தவுடன் செய்வதால் தொடை மற்றும் தொப்பையில் உள்ள கொழுப்பும் கூட குறையுமாம்.
Sprints : இந்த உடற்பயிற்சி, கிட்டத்தட்ட ரன்னிங் உடற்பயிற்சி போன்றதுதான். ஆனால், நாம் ஓடுகையில் கால்களை அருகருகே வைக்காமல் கொஞ்சம் தொலைவாக வைத்து ஓடுவதை ஸ்ப்ரிண்ட்ஸ் என கூறுகிறோம். இது, நல்ல கார்டியோ உடற்பயிற்சியாகும். இதயத்துடிப்பை அதிகரிக்க செய்து, கொழுப்பை கரைய செய்யும் இந்த உடற்பயிற்சியை 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
Plank: இந்த உடற்பயிற்சியின் போது தோள்பட்டை, கை முட்டி, கணுங்கால் ஆகிய பகுதிகளை உபயோகிக்க வேண்டும். இதனால் அடிவயிற்று தொப்பை குறையும் என பயன்பெற்றவர்கள் கூறுகின்றனர். காலையில் எழுந்தவுடன் இதை செய்யலாம்.
Jumping Rope : கயிறு தாண்டுதல் என்ற உடற்பயிற்சியைதான் நாம் ஜம்பிங் ரோப் என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம். இது, உடலுக்கு ஆற்றல் அளிக்கும் ஒரு நல்ல கார்டியோ உடற்பயிற்சியாகும். ஒரு நாளைக்கு 1,000 முறை கயிறு தாண்டுதல் செய்தால் 140-190 கலோரிகளை குறைக்கலாம்.
Dance Workout : உடற்பயிற்சி என்பது, எப்போதும் உடலுக்கு வருத்தத்தை தரும் அளவிற்கு கடுமையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, உடற்பயிற்சியை இன்னும் எளிமையாகவும் மகிழ்ச்சியானதாவும் மாற்ற நடனத்துடன் கூடிய ஜூம்பா (Zumba) உடற்பயிற்சிகளை செய்யலாம்.
Stretching : உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் உடலை வளைத்து-நெளித்து ஸ்ட்ரெட்சிங் செய்வதால் தசைகள் வலுவடையும். அது மட்டுமன்றி, உடற்பயிற்சியால் முறுக்கேறிய தசைகளும் தளர்வடையும் என உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)