அதிக கொலஸ்ட்ரால் பாடாய் படுத்துதா? இதையெல்லாம் டயட்டில் சேருங்க

Tips to Reduce High Cholesterol: உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது உடலுக்கு நல்லதாக கருதப்படுவதில்லை. கொழுப்பு அதிகரித்தால், இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கும் இது வழிவகுக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மருந்துகளை சிலர் எடுத்துக்கொள்கிறார்கள். இருப்பினும், உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /5

ஓட்ஸ், அரிசி, பழங்கள், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, பட்டாணி, தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கரையக்கூடிய நார்ச்சத்து அவற்றில் ஏராளமாக காணப்படுகிறது. இது அதிக கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனுடன், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.  

2 /5

கொத்தமல்லி விதை (தனியா) தண்ணீரைக் குடிப்பதால் அதிக கொலஸ்ட்ரால் குறைந்து, உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதற்கு கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து இரவு முழுவதும் ஆற வைக்கவும். காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இவ்வாறு செய்வதால் நன்மைகள் உண்டாகும்.

3 /5

மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காய்கறிகளை சமைக்கும்போது மஞ்சளை தினமும் உபயோகிப்பது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இது தவிர இரவில் தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் சேர்த்து பருகலாம். இதுவும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.  

4 /5

ஆளிவிதைகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதனுடன், அவை தமனிகளின் வீக்கத்தையும் குறைக்கின்றன. ஆளி விதையை முழுவதுமாகவோ அல்லது அரைத்தோ பாலுடன் பொடியாக எடுத்துக் கொள்ளலாம். தினமும் 30 கிராம் ஆளி விதையை உட்கொள்ள வேண்டும்.

5 /5

க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு கப் க்ரீன் டீ கண்டிப்பாக பருக வேண்டும். இது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)