சூரிய ஒளி நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான், ஆனால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பது நம் சருமத்தை கருமை அடைய செய்யும்.
சருமத்தின் கருமையை போக்க, விலை உயர்ந்த க்ரீம் எல்லாம் தேவையில்லை. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு சருமத்தை பளபளக்கச் செய்யலாம்.
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் 'மெலனின்' எனும் நிறமியின் உற்பத்தியை தூண்டுவதால் நமது சருமம் கருப்பாகிறது. குறிப்பாக முகம், கழுத்து, கைப்பகுதிகள் அதிக அளவில் கருத்து போய் விடும்.
சன் டானிங் காரணமாக, தோல் நிறம் கருமையாகி, முகம் ஒளியிழந்து விடும். எனவே, பலரும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, அதிகம் செலவு செய்து பல்வேறு வகையான பொருட்களை உபயோகித்து அழகு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால், வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு சருமத்தை பளபளக்கச் செய்யலாம்.
முகம் கருக்கும் பிரச்சனையில் இருந்து விடுபட உருளைக்கிழங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. உருளைக்கிழங்கு சாற்றை பருத்தியின் உதவியுடன் உதவியுடன் முகத்தில் தடவவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தை சுத்தம் செய்ய நல பலன் கிடைக்கும்
வெயிலால் முகம் கருக்கும் பிரச்சனையில் இருந்து விடுபட தக்காளியை பயன்படுத்தலாம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்கும். கூடுதலாக, இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும்.
மஞ்சள் சன் டானிங் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவும். இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், சருமத்தில் உள்ள கறைகள், முகப்பரு மற்றும் டானிங் ஆகியவற்றை நீக்க உதவுகிறது. 4 ஸ்பூன் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளை நன்கு கலக்கவும். பருத்தியின் உதவியுடன் உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும்.
சமையலறையில் உள்ள கடலை மாவு டானிங்கை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இறந்த சரும செல்களை அகற்றுவதன் மூலம் சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. இதனை சருமத்தில் பேக் அல்லது ஸ்க்ரப் போன்று பயன்படுத்தலாம். இதற்கு பால், தயிர், ரோஸ் வாட்டர் போன்றவற்றை கலந்து தடவவும்.
கற்றாழை அனைத்து வகையான சரும கோளாறுகளையும் குணப்படுத்த மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம். சன் டானிங் இருந்தால், கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் தடவ வேண்டும். இரவு தூங்கும் முன் தடவி காலையில் கழுவி விடவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.