ஆன்லைன் போலி விளம்பரங்களை கண்டறிவது எப்படி?

ஆன்லைனில் வரும் விளம்பரங்களில் போலி விளம்பரங்களை எப்படி கண்டறிவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /5

போலி நிறுவனங்கள் ட்ரெண்டிங்கில் உள்ள பொருட்களை வரையறை இல்லாமல் இணையதளம் முழுவதும் விளம்பரம் செய்வார்கள். மிகக்குறைந்த விலையில் தருவதாக விளம்பரங்கள் இருக்கும்.  

2 /5

பொருட்களை வாங்கும் முன் தொகைகளை செலுத்த சொல்லி வற்புறுத்துவார்கள். பிறகு ஜிஎஸ்டி, டெலிவரி கட்டணங்களை கூடுதலாக கேட்டு கட்டாயப்படுத்துவார்கள்.  

3 /5

மக்களை நம்ப வைக்க டெலிவரி ட்ராக்கிங்கை போலியாக அனுப்புவார்கள். பணம் செலுத்திய பிறகு நம்பரை பிளாக் செய்து தப்பி விடுவார்கள். இந்த குறிப்பிட்ட ஆஃபர் குறிப்பிட்ட காலம் வரை என்று சொல்லி நம்ப வைப்பார்கள்.  

4 /5

விளம்பரங்களை பார்த்தவுடன் கமெண்ட் சென்று பார்வையிட வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நம்பத் தகுந்த இணையதளங்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.   

5 /5

இவ்வாறு https ://who.is அல்லது https://isitphishing.org அல்லது https://www.socialsearcher.com/google- social-searcher ஆகிய தளங்களில் குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் பெயரை ஆய்வு செய்து அதனுடைய உண்மை தன்மையை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு விழிப்போடு இருப்பதன் மூலம் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் ஏமாறாமல் இருக்க முடியும்.