வக்ர நிவர்த்தி அடையும் குரு ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்!

குரு பகவான் நவம்பர் 24, 2022 முதல், மீனத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால், சில ராசிக்காரர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறி, அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குருவின் ஆசியினால் , அனைத்து வகைகளிலும் வெற்றிகளைப் பெற்று, அமோகமான வாழ்க்கையை பெற இருக்கும் 5 ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

 

1 /5

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு வக்ர நிவர்த்தி அடையும் குருவினால் பொன்னான நாட்கள் தொடங்கும். தொழில், வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். புதிய வேலையில் சேரலாம். வருமானம் அதிகரிக்கும். தொழில் தொடங்க நல்ல நேரம். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.  

2 /5

கடகம்: வக்ர நிவர்த்தி அடையும் குரு கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வசந்த காலம் தொடங்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், புதிய அத்தியாயத்தை உருவாக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழிலுக்கான வழிகள் திறக்கப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

3 /5

கன்னி: வக்ர நிவர்த்தி அடையும் குருவினால் கன்னி ராசியினருக்கு நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதனால் பணப் பற்றாக்குறையில் இருந்து விடுதலை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். முதலீடு லாபகரமாக இருக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 

4 /5

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உயர் பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. 

5 /5

கும்பம்: வக்ர நிவர்த்தி அடையும் குருவினால் , தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.உங்கள் பல விருப்பங்களை நிறைவேற்றுவார். கடின உழைப்பு வெற்றியைத் தரும். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து வேலைகளும் நிறைவேறும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு. வேலை சம்பந்தமாக வெளியூர் செல்லலாம். சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)