சொந்த வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்கும் முருக பெருமானின் இரண்டெழுத்து மந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்.
பல ஆண்டு கனவாக இருக்கும் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பவர்கள் முருகனை நினைத்து இந்த வழிபாடு செய்தால் உங்களின் கனவு நனவாகும்.
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்குத் தான் சொந்த வீட்டின் அருமை புரியும் என்பார்கள். காணி நிலம் ஆவது நமக்கென்று இருக்கக் கூடாதா? என்று பலரும் நினைப்பதுண்டு. பூமி வசியம் என்பது அவ்வளவு எளிதில் நமக்கு கிடைப்பதில்லை.
இப்படி நமக்கெனவே சொந்தமாக நிலம் கூட இல்லையே என்று எவ்வளவோ பேர் ஏக்கம் கொள்கின்றனர். இவர்களின் அத்தனை கனவும் நினைவாக கூடிய அற்புதமான ஒரு எளிய பரிகாரம் பற்றிய தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
சொந்தமாக பூமி உங்களுக்கு என்று வசியம் ஆக பூஜை அறையில் சில எளிய பரிகாரங்களை செய்து வரலாம். சொந்த நிலம், சொந்த வீடு வாங்கக் கூடிய யோகத்தை கொடுக்கக் கூடியவர் முருகன். செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வேண்டிக் கொண்டு விரதம் இருந்து வாருங்கள்.
பூமி வசியம் ஏற்பட இவரின் “ஓம்” என்னும் பிரணவ மந்திரமே போதுமானது. “ஓம்” என்னும் மந்திரத்தை அடி வயிற்றிலிருந்து உச்சிவரை எதிரொளிக்கும்படி சத்தமாக 108 முறை பூஜை அறையில் அமர்ந்து முருகப் பெருமானை வேண்டி உச்சரியுங்கள். “ஓம் சரவணபவ” என்றும் உச்சரிக்கலாம்.
செவ்வாய்க் கிழமை அன்று ஒரு புதிய செங்கல் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை முருகன் கோவிலுக்கு கொண்டு போய் வைத்து மனதார சீக்கிரம் சொந்த நிலம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த செங்கல்லை கொண்டு வந்து பூஜை அறையில் வையுங்கள். தண்ணீரால் சுத்தம் செய்து, மஞ்சள் குங்கும பொட்டு இட்டு, பூ வைத்து இந்த செங்கலை, செந்தில் முருகனாக நினைத்து ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் அபிஷேகம் செய்து இது போல வழிபட்டு வர வேண்டும்.
செங்கல் வைத்து வழிபடும் பொழுது பூஜை அறையில் பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும். பச்சரிசி மாவினால் பூமியில் கோலம் போடும் பொழுது, இயல்பாகவே உங்களுக்கு பூமி வசியம் ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தினமும் வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போடுபவர்களுக்கு நில வசியம் நிச்சயம் உண்டாகும். இவர்கள் நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் உடனே இவர்களால் வாங்கி விட முடியும். ஜாதகத்தில் பூமி தோஷம் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது.
பூமி தோஷம் உள்ளவர்கள் அதற்கான பரிகாரத்தை செய்த பின்பு தான் நிலம் வாங்கக் கூடிய யோகம் அவர்களுக்கு உண்டாகிறது, ஆனால் எந்த தோஷமும் இல்லாமல் நிலம் வாங்க முடியாமல் தவிப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து பயனடைய முடியும்.
பச்சரிசி மாவினால் கோலம் போட்டு, சிறு உயிர்களுக்கு நாம் தானம் செய்யும் பலன்களை அனுபவிக்கிறோம். செவ்வாய்க் கிழமையில் செங்கல் வழிபாடு செய்து, பச்சரிசி மாவினால் கோலம் போட்டு, மனதார முருகப் பெருமானை வேண்டிக் கொண்டு வருபவர்களுக்கு நிலம் வாங்கக் கூடிய யோகம் என்பது விரைவாகவே நடக்கக்கூடிய விஷயமாக அமையும்.
மேலும் நிலம் வாங்க வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள், செவ்வாய் தோறும் மூன்று பேருக்கு நிலத்தில் கிடைக்கக் கூடிய கடலை, கிழங்கு வகைகள் போன்றவற்றை தானம் செய்து வாருங்கள்.
செவ்வாய் தோறும் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று ஒன்று அல்லது ஆறு விளக்குகள் போட்டு தீபம் ஏற்றி வாருங்கள், விரைவிலேயே நிலம் வாங்க கூடிய யோகம் உங்களுக்கு உண்டாகும். நிலத்தில் பிரச்சனைகள் இருப்போறும் இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் தீர்வு கிடைக்கும்.