Trisha Recent Instagram Post Before Vijay TVK Conference : நடிகை த்ரிஷாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்போம்.
Trisha Recent Instagram Post Before Vijay TVK Conference : நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவருமான விஜய், தனது முதல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் நடத்த இருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கண்களும் தற்போது இந்த மாநாட்டின் மீதுதான் இருக்கிறது. மாநாட்டிற்கான வேலைகள் பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், நடிகை த்ரிஷா வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் ஒன்றாக நடித்த லியோ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.
இவர்கள் இருவரும் நடித்திருந்த கில்லி திரைப்படமும் இந்த ஆண்டு ரீ-ரிலீஸ் ஆனது. விஜய்யின் பிறந்தநாள் கடந்த ஜூன் மாதம் கொண்டாடப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவித்த த்ரிஷா இதயம் மற்றும் இன்ஃபினிட்டி இமோஜிக்களை இணைத்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் தி கோட் படம் வெளியானது. இந்த படத்தில் ஹிட் ஆன பாடல்களுள் ஒன்று ‘மட்ட’.
மட்ட பாடலில் த்ரிஷா நடனமாடினார். அதிலிருந்து, “எங்க டா அந்த மஞ்ச சாரி..”என்று விஜய் பேசிய டைலாக் வைரலானது.
விஜய்-த்ரிஷா குறித்த கிசுகிசு வெளியில் பரவினாலும், உண்மையில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என கூறப்படுகிறது.
நடிகை த்ரிஷா, அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்திலும் ஹீரோயினாக கமிட் ஆனார். அந்த படம்தான் குட் பேட் அக்லி.
நடிகை த்ரிஷா, குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் போட்ட பதிவுதான் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை த்ரிஷா “தேன்குழல் இன்” என்று எழுதி, பக்கத்தில் ஸ்பெயின் நாட்டின் கொடியை பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், அது பார்க்க தமிழக வெற்றிக்கழகம் கொடி போல இருப்பதாக மீம் போட்டு வருகின்றனர். மேலும், த்ரிஷா மறைமுகமாக விஜய்க்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் வதந்தி பரப்பி வருகின்றனர். உண்மையில் அவர் ஸ்பெயின் நாட்டு கொடியைதான் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.